ஆலு மேத்தி ரைஸ்
தேவையான பொருட்கள்:
வெந்தய கீரை - 2 கப்
உருளைக்கிழங்கு - 3
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
தக்காளி- ஒன்று
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
சாதம் - 4 கப்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - சிறிது
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெந்தய கீரையை ஆய்ந்து கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து சின்ன சின்னதாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம்
பச்சை மிளகாய், தக்காளி இவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம்
பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
இவை வதங்கியதும் அதில் வெந்தயகீரையை போட்டு வதக்கவும்.
வெந்தய கீரை வதங்கியதும் அதில் மிளகாய் தூள், கரம் மசாலா போட்டு வதக்கவும்.அவை நன்கு வதங்கும் அளவிற்கு கிளறவும்.
அதில் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு மசாலா அனைத்தும் சேரும் அளவிற்கு நன்கு கிளறவும்.
சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைத்து கொண்டு அதை மசாலா கலவையில் போட்டு நன்கு கிளறவும்.
சாதமும் மசாலாவும் நன்கு கலந்ததும் அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.