ஃப்ரைட் ரைஸ் (4)
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி ரைஸ் - 2 கப் (உதிர் உதிராக வேகவைத்ததுக்கொள்ளவும்)
கேரட் - 200 கிராம்
பீன்ஸ் - 200 கிராம்
பட்டாணி - 200 கிராம்
வெங்காயம் -3 ( சுமாரானது)
தக்களியை - 6
வெள்ளை மிளகு - 3 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
அஜினோமோட்டோ - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பட்டாணியை 5 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
வெங்காயம்,தக்களியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
கேரட், பீன்ஸை நீளமாக நறுக்கிக்கொள்ளவும்.
பின் அடுப்பில் சட்டியைவைத்து 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி பீன்ஸ், பட்டாணியை போட்டு வதக்கவும்.1 1/2 தேக்கரண்டி வெள்ளை மிளகு, உப்பு போட்டு மற்ற காய்கறிகளையும் போட்டு நன்கு வதக்கி இறைக்கி வைத்துக்கொள்ளவும்.
பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து மீதி உள்ள எண்ணெய், நெய் ஊற்றி தீயை குறைத்துவைத்து வெங்காயம் போட்டு வதக்கி,தக்காளியை போட்டு வதக்கவும்.நன்கு வதங்கிய பின் முதலில் வதக்கிவைத்த காய்கறிகளை போட்டு வதக்கவும்.
தேவையான அளவு உப்பு, 1 1/2 தேக்கரண்டி வெள்ளை மிளகு போட்டு வதக்கி, சோயா சாஸ், அஜினோமோட்டோ போட்டு நன்கு வதக்கி, வேகவைத்த சாதத்தை போட்டு நன்கு கிளறி இறக்கவும்.