ரசம் (4)

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பூண்டு - 4 பல்

தக்காளி - 2

புளி - எலுமிச்சையளவு

தண்ணீர் - 4 கோப்பை

மிளகு - 2 தேக்கரண்டி

சீரகம் - 2 1/2 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

பெருங்காயப்பொடி - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 5 இலை

கொத்தமல்லி இலை - 1/2 கோப்பை

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புளியைத் தண்ணீரில் பிழிந்து எடுத்து கொள்ளவும். மிளகு மற்றும் சீரகத்தை பொடித்து கொள்ளவும்.

தக்காளியை பிழிந்து புளித்தண்ணீரில் கலந்து கொள்ளவும். பூண்டை நசுக்கி கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு மற்றும் அரை தேக்கரண்டி சீரகம் போட்டு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து பின் புளிக்கரைச்சலை ஊற்றவும்.

பொடித்த மிளகு சீரகம், உப்பு மற்றும் பூண்டை போடவும். கொதி வந்ததும் பெருங்காயப்பொடி மற்றும் கொத்தமல்லி சேர்த்து ஒரு நிமிடம் வைத்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: