பருப்பு ரசம்
0
தேவையான பொருட்கள்:
தக்காளி - 1
வேக வைத்த துவரம் பருப்பு - 2 கரண்டி
புளி - கோலி அளவு
நசுக்கிய பூண்டு - 2 பல்
ரசப்பொடி - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள், மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காயம், உப்பு, கொத்தமல்லித் தழை - தேவையான அளவு
அரிசி களைந்த நீர் - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
நெய் - சிறிதளவு
செய்முறை:
புளி, பருப்பு, தக்காளி, ரசப்பொடி, உப்பு, மஞ்சள் தூள், மிளகுத் தூள், சிறிது கொத்தமல்லித் தழை சேர்த்து கரைத்து வைக்கவும்.
அதனுடன் அரிசி களைந்த நீரைச் சேர்க்கவும்.
நெய்யில் கடுகு, சீரகம், பெருங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
பின்பு கரைத்த நீரைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து பரிமாறவும்.