பருப்பு உருண்டை ரசம்
தேவையான பொருட்கள்:
பருப்பு - 1 கப் அல்லது தேவையான அளவு
ரசப்பொடி - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகு - 1/2 தேக்கண்டி
ரகம் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
செய்முறை:
பருப்பை ஊறவைத்து கிரைண்டரில் அரைத்து உருண்டைகளை வேகவைத்து தயார் செய்து கொள்ளவும்.
தண்ணீரில் புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஓர் அகலமான பாத்திரத்தில் புளிக்கரைச்சலை ஊற்றி உப்பு போட்டு, ரசப்பொடி, கறிவேப்பிலைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
அதில் மூன்று முன்று உருண்டைகளாகச் போட்டு கொதிக்க விடவும்.
முதலில் போட்ட உருண்டைகள் மேலே வந்து மிதந்தவுடன் தான் மேலும் மூன்று உருண்டைகளைச் சேர்க்க வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம் போட்டு வறுத்து, எடுத்து மிக்ஸியில் அரைத்து ரசத்தில் சேர்க்கவும்.
அதே வாணலியில் சிறிது எண்ணேய் ஊற்றி கடுகு தாளித்து ரசத்துடன் சேர்த்து பரிமாறவும்.