தேங்காய் பால் ரசம் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஒன்றாக கலக்கி கொள்ள:

தேங்காய் பால் - 2 கப்

புளி - சிறிதளவு

தக்காளி - 1

ஒன்றும் பாதியுமாக தட்டி கொள்ள:

மிளகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

சோம்பு - 1/2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 1

பூண்டு - மூன்று பற்கள்

கறிவேப்பிலை - 1/4 கைப்பிடி

கொத்தமல்லித்தழை - 1/4 கைப்பிடி

செய்முறை:

தக்காளியை நன்கு பிசைந்து அதில் புளி தண்ணீர் மற்றும் தேங்காய் பாலை சேர்த்து கொள்ளவும்.

கொரகொரப்பாக தட்ட வேண்டிய பொருட்களை தட்டி கொள்ள வேண்டும்.

சட்டியை காயவைத்து அதில் எண்ணெய் ஒரு தேக்கரண்டி ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்தமிளகாய் தாளித்து அதில் பெருங்காய பொடியை சேர்க்கவும்.

லேசாக தட்டி வைத்துள்ளதை சேர்த்து வதக்கி, கரைத்து வைத்துள்ள மூன்று கலவையையும் சேர்த்து உப்பு சேர்த்து தீயை மிதமாக வைக்கவும்.

லேசாக நுரைத்து வரும் போது இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: