தக்காளி ரசம் (4)
0
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு வேக வைத்து வடித்த நீர் - 1 கப்
2 தக்காளி அடித்து நீர் கலந்து - 2 கப்
ரசப்பொடி - 2 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
எலுமிச்சை சாறு - 1 மேசைக்கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
துவரம் பருப்பு வேக வைத்த நீருடன், தக்காளி மசித்த நீர், ரசப்பொடி, உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி கலந்து வைக்கவும்.
பாத்திரத்தில் 2 தேக்கரண்டி நெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம் தாளித்து மிளகாய் வற்றல் போட்டு சிவந்ததும் கலந்த நீரை ஊற்றி கொதிக்க விடவும்.
கொதித்ததும் எடுத்து எலுமிச்சை சாறு மீதம் உள்ள நெய் சேர்த்து பரிமாறவும்.