க்ரீன் ஸ்டாக் ரசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

க்ரீன் ஸ்டாக் - 1 கப்

பூண்டு சேர்த்து வேக வைத்து மசித்த துவரம் பருப்பு - 1/4 கப்

தக்காளி - 1

புளி - தேவைக்கு ஏற்ப

கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் - தாளிக்க

ரசப்பொடி - 1 1/2 தேக்கரண்டி

நெய் - தாளிக்க (சுவை கூடும்)

கொத்தமல்லி (காம்புடன் போட்டால் நல்ல வாசம் வரும்), கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவைக்கு ஏற்ப

செய்முறை:

தக்காளியை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

கொத்தமல்லியை ஆய்ந்து வைத்துக் கொள்ளவும். புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்.

புளிக்கரைசலுடன் க்ரீன் ஸ்டாக், மசித்த துவரம் பருப்பு, தக்காளி, ரசப்பொடி, கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் நெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

தாளித்தவற்றுடன் கரைத்ததை ஊற்றி கொதிக்க வைக்கவும், 4 கொதி வந்ததும் இறக்கி தீயில் இருந்து எடுத்து விட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: