இஞ்சி ரசம் (1)
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1/4 படி
ரசப்பொடி - 1 தேக்கரண்டி
புளி - 2 கொட்டைப்பாக்கு அளவு
சிறிய தக்காளி - 1
கடுகு - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு துண்டு
இஞ்சி - ஒரு துண்டு
கொத்தமல்லி இலை - வாசனைக்கு (சிறிது)
கறிவேப்பிலை - வாசனைக்கு (சிறிது)
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இஞ்சியை தோல் சீவி விட்டு மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
இந்தச் சாற்றினை மேலாக இறுத்து வைத்துக் கொண்டால் சுண்ணாம்பு அடியில் தங்கிவிடும்.
தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பருப்பை அரை படி தண்ணீரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து வைக்கவும்.
புளியை தண்ணீரில் ஊறவைத்து, ஒரு பாத்திரத்தில் புளிக்கரைச்சலாக எடுத்துக் கொள்ளவும்.
புளிக்கரைச்சலுடன் உப்பு, பெருங்காயம், நறுக்கிய தக்காளி, ரசப்பொடி போட்டு 8 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
பிறகு கொதித்தவுடன் வேகவைத்த பருப்பை போட்டு நுரைத்து வந்தவுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு தாளித்த கடுகையும் போட்டு இறக்கிவைத்து இஞ்சி சாற்றை சேர்க்கவும்.
விருப்பமானால் அரை தேக்கரண்டி சீரகமும் தாளித்து சேர்த்து பரிமாறவும்.