ஸ்ட்ராபெர்ரி கப் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஸ்ட்ராபெர்ரி - 6 அல்லது 7 ஆல் பர்பஸ் ஃப்ளார் - 1 1/2 கப் பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி பால் - கால் கப் வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி வெண்ணெய் - அரை கப் சர்க்கரை - ஒரு கப் முட்டை - ஒன்று முட்டை வெள்ளைக்கரு - 2 ரெட் ஃபுட் கலர் - சிறிது கப் கேக் லைனர் - 12 க்ரீம் சீஸ்/ஸ்ட்ராபெர்ரி ஃப்ராஸ்டிங் - ஒரு கேன்

செய்முறை:

தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும். ஸ்ட்ராபெர்ரியை ப்ளெண்டர்/ஃபுட் ப்ராசஸரில் போட்டு அரைத்து கொள்ளவும். தண்ணீர் சேர்க்க கூடாது.

ஆல் பர்பஸ் ஃப்ளார் மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து 2 அல்லது 3 முறை சலித்துக் கொள்ளவும்.

ஸ்ட்ராபெர்ரி பியூரியில் வெனிலா எசன்ஸ் மற்றும் பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் வெண்ணெயுடன் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். பின்னர் முட்டை மற்றும் முட்டை வெள்ளைக்கரு சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். இப்போது சிறிது மாவு சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் ஸ்ட்ராபெர்ரி-பால் கலவையை இதனுடன் சேர்க்கவும்.

பிறகு மீதியுள்ள மாவையும் சேர்த்து கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.

விருப்பப்பட்டால் சிறிது ரெட் கலர் சேர்த்துக் கொள்ளவும். ஓரிரு துளி ரெட் கலர் சேர்த்தால் பின்க் நிறம் கிடைக்கும்.

கப் கேக் லைனரை மஃபின் ட்ரேயில் அடுக்கி

மாவு கலவையை முக்கால் பாகம் ஊற்றவும்.

அவனை 350 டிகிரி முற்சூடு செய்து 22 முதல் 25 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.

டூத் பிக் கொண்டு வெந்ததை உறுதி செய்து கொள்ளவும். கேக் வெந்துவிட்டால் கேக்கின் மேற்பகுதியை விரல்களால் அழுத்தினால் ஒட்டாமல் இருக்கும்.

ஒரு மணி நேரம் கப் கேக் நன்கு ஆறியதும் ப்ராஸ்ட்டிங் செய்யலாம். ப்ராஸ்டிங்கில் சிறிது ரெட் கலர் சேர்த்தால் அழகிய பின்க் நிறம் கிடைக்கும். வெள்ளை

பின்க் கலர் ப்ராஸ்டிங் இதற்கு நன்றாக இருக்கும்.

மேலே ஸ்ட்ராபெர்ரி

ஸ்ப்ரின்கிள்ஸ் கொண்டு விரும்பியவாறு அலங்கரிக்கலாம்.

சுவையான ஸ்ட்ராபெர்ரி கப் கேக் தயார்

குறிப்புகள்: