ஸ்டஃப்டு மஃபின்ஸ்
தேவையான பொருட்கள்:
மைதா - ஒரு கப் தயிர் - ஒரு மேசைக்கரண்டி (விரும்பினால்) பால் - 4 மேசைக்கரண்டி முட்டை - 2 பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா - அரை தேக்கரண்டி வெண்ணெய் / எண்ணெய் - 40 கிராம் சர்க்கரை - 2 தேக்கரண்டி உப்பு ஸ்டஃப் செய்ய: பட்டாணி - 2 கைப்பிடி உருளைக்கிழங்கு - 2 வெங்காயம் - பாதி பச்சை மிளகாய் - ஒன்று மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி தனியா தூள் - அரை தேக்கரண்டி கரம் மசாலா - சிறிது மஞ்சள் தூள் - சிறிது கொத்தமல்லித் தழை எண்ணெய் - 2 தேக்கரண்டி உப்பு
செய்முறை:
உருளைக்கிழங்கு
பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்
பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதக்கிய பின் தூள் வகைகள் சேர்த்து பிரட்டவும்.
பின் வேக வைத்த உருளைக்கிழங்கு
பட்டாணி
கொத்தமல்லித் தழை சேர்த்து பிரட்டி விடவும்.
தேவைப்பட்டால் சிறிது நீர் விட்டு மசாலா வாசம் போக அடுப்பில் வைத்து கிளறி நீரில்லாமல் இறக்கவும்.
மைதாவுடன் பேக்கிங் பவுடர்
பேக்கிங் சோடா
உப்பு
சர்க்கரையை கலந்து கொள்ளவும். முட்டையை அடித்துக்கொண்டு அதில் பால்
எண்ணெய் ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.
இரண்டு கலவையையும் ஒன்றாக கலந்து வைக்கவும். மற்ற மஃபின் போல் இந்த மாவையும் அதிகம் அடிக்க கூடாது. சற்று கெட்டியாகவே இருக்கும்.
மஃபின் மோல்டுகளில் மாவு பாதி வைத்து மேலே உருளை மசாலா வைத்து லேசாக விரலால் அழுத்தி விடவும். அதன் மேலே மீண்டும் சிறிது மாவு வைத்து 180 C’ ல் முற்சூடு செய்த அவனில் பேக் செய்யவும்.
டூத் பிக் அல்லது கத்தியை உள்ளே விட்டு எடுத்தால் சுத்தமாக வரும் போது எடுக்கவும். இந்த அளவில் 12 மஃபின்கள் கிடைக்கும்.
சுவையான ஸ்பைசி ஸ்டஃப்டு மஃபின்கள் தயார். இதில் விருப்பமான காய்கள்
கீரைகள் சேர்த்தும் ஸ்டஃபிங் செய்யலாம். குழந்தைகளுக்கு மேலே சீஸ் தூவி கூட பேக் செய்யலாம்.