வேகான் ரவா கேக் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு -1 கப்

வெள்ளை ரவை-1 கப்

சர்க்கரை- 1 1/2 கப்

தேங்காய்ப்பால்-2 கப்

வாழைப்பழம்-1(கனிந்தது)

நெய்-1-டீஸ்பூன்

வெனிலா எசன்ஸ்-1டீஸ்பூன்

ஏலக்காய்த்தூள்-1டீஸ்பூன்(விருப்பப்பட்டால்)

பொடியாக நறுக்கிய வால்நட்ஸ்-3 டேபிள்ஸ்பூன்

வெண்ணெய் -1/4கப்

பேகிங் பவுடர்-1டீஸ்பூன்

உப்பு-சிட்டிகை

செய்முறை:

முதலில் ரவையை ஒரு டீஸ்பூன் நெய் விட்டு வாசம் வர வறுக்கவும். அதோடு தேங்காய்பால் விட்டு 2 மணி நேரம் ஊறவைக்கவும்

மைதாமாவில் பேக்கிங்பவுடர்,உப்பு சேர்த்து சலிக்கவும்

வாழைப்பழத்தை மிக்ஸியில் கூழாக அரைக்கவும்

சர்க்கரையை பொடிக்கவும்

முதலில் வெண்ணை,வாழைப்பழக்கூழ்,ஊறிய ரவை சேர்த்து கலக்கவும்

அதோடு சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

வெனிலாஎசன்ஸ் ,ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்

பின் மைதாமாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்

பொடித்த வால்நட்ஸில் சிறிது மைதாமாவை பிசறி அதை இந்தகலவையில் கொட்டி கலக்கவும்.

350டிகிரி F முற்சூடு செய்த அவனில் 30-35நிமிடம்(வேகும்வரை) வைத்து

எடுக்கவும்.

குறிப்புகள்:

இதில் வால்நட்ஸ்க்கு பதில் பொடித்த முந்திரி அல்லது பாதாமல்லது பிஸ்தா சேர்க்கலாம்.

வெண்ணைக்கு பதில் எண்ணை சேர்க்கலாம்

தேங்காய்ப்பாலுக்கு பதில் பால் சேர்க்கலாம்.

சிட்டிகை உப்புக்கு பதில் பேக்கிங் சோடா சேர்க்கலாம்