வெனிலா ஸ்பாஞ்ச் கேக்
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 250 கிராம் வெண்ணெய் - 250 கிராம் பொடித்த சர்க்கரை - 250 கிராம் முட்டை - 4 - 5 பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி வெனிலா எசன்ஸ் - கால் தேக்கரண்டி கேக் சீட் (Caraway Seed) - அரை தேக்கரண்டி உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து 3 முறை நன்றாக சலித்து வைக்கவும். அவனை முற்சூடு செய்யவும். பேக்கிங் ட்ரேயில் சிறிது பட்டர் தடவி
அதன் மேல் மைதா மாவைத் தூவி வைக்கவும். (அல்லது ட்ரேயின் அளவிற்கு பட்டர் பேப்பரை நறுக்கி லைனராக உபயோகிக்கவும்). முட்டையை உடைத்து மஞ்சள் கருவைத் தனியாகப் பிரித்து வைக்கவும்.
முட்டையின் வெள்ளைக் கருவை மிக்ஸியில் அல்லது பீட்டரால் நுரை பொங்க நன்கு அடித்துக் கொள்ளவும்.
ஒரு பௌலில் பொடித்த சர்க்கரையுடன் வெண்ணெய் கலந்து பீட்டரால் நன்கு சாஃப்ட்டாக வரும் வரை ஒரே திசையில் அடிக்கவும். (இப்படி அடிப்பதால் கலவை காற்றை உள்ளிழுத்து கேக் நன்றாக உப்பி வரும்).
அத்துடன் முட்டையின் மஞ்சள் கருவைச் சேர்த்து
ஒன்றாகச் சேரும்படி அடிக்கவும்.
பிறகு நுரை பொங்க அடித்த முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து கலந்துவிடவும்.
அத்துடன் வெனிலா எசன்ஸ்
உப்பு மற்றும் கேக் சீட் சேர்த்து ஒரு முறை கலந்துவிடவும்.
பிறகு சலித்த மைதா மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்து ஒரு மரக்கரண்டி அல்லது ஸ்பேட்சுலா (Spatula) கொண்டு
மெதுவாக ஒரே திசையில் கலவையும் மாவும் சேரும்படி மடித்துவிடவும். (கலக்கக் கூடாது). இதற்கு ஃபோல்டிங் (Folding) என்று பெயர்.
இவ்வாறு மடித்துவிடுவதால் (ஃபோல்டிங்) ஏற்கனவே உள்ளிழுக்கப்பட்ட காற்று
மாவைச் சேர்த்த பிறகு வெளியேறாமல் இருக்க உதவுகிறது.
இந்தக் கலவையை ஒரு பேக்கிங் ட்ரேயில் ஊற்றி
முற்சூடு செய்த அவனில் வைத்து 180 C - ல் 40 நிமிடங்கள் பேக் செய்யவும்.
ஒரு நீளமான குச்சி அல்லது டூத் பிக்கை கேக்கின் உள்ளே விட்டு
கலவை குச்சியில் ஒட்டாமல் வருகிறதா எனப் பார்த்து
வெந்ததை உறுதி செய்து கொண்டு வெளியே எடுத்து ஆற வைக்கவும்.
டேஸ்டி வெனிலா ஸ்பாஞ்ச் கேக் ரெடி ஆறியதும் துண்டுகள் போட்டுப் பரிமாறவும். இம்முறையில் செய்யப்படுவதால் கேக் பஞ்சு போல மிகவும் சாஃப்ட்டாக இருக்கும்.