வீட் ஓட்ஸ் பான் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - ஒரு கப் ஓட்ஸ் - முக்கால் கப் பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை வெனிலா எசன்ஸ் - 3 துளிகள் பேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி சர்க்கரை - அரை தேக்கரண்டி உப்பு - கால் தேக்கரண்டி பால் - ஒன்றரை கப்

செய்முறை:

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். பாலை காய்ச்சி ஆற வைக்கவும்.

ஓட்ஸை மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் பொடித்த ஓட்ஸுடன் மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து காய்ச்சி ஆறிய பாலை ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்.

தோசை கல்லில் எண்ணெய் தடவி

கலந்து வைத்துள்ள மாவை சிறிய தோசைகளாக வார்த்து மிதமான சூட்டில் வேக வைக்கவும்.

ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு

மறுபக்கத்தையும் வேகவிட்டு எடுக்கவும்.

மேப்பிள் சிரப் அல்லது தேனை பான் கேக் மேலே ஊற்றி பரிமாறவும். குழந்தைகளுக்கேற்ற மாலை நேர சிற்றுண்டி இது.

குறிப்புகள்: