வாழைப்பழ ராகி கேக்
தேவையான பொருட்கள்:
நன்றாக பழுத்த வாழைப்பழம் - 2 சர்க்கரை - கால் கப் ராகி மாவு - முக்கால் கப் மைதா - கால் கப் பேக்கிங் பவுடர் - முக்கால் தேக்கரண்டி பேக்கிங் சோடா - அரை தேக்கரண்டி முட்டை - ஒன்று எண்ணெய் - கால் கப் வெனிலா எசன்ஸ் - சில துளிகள் நட்ஸ் (விரும்பினால்)
செய்முறை:
மிக்ஸியில் வாழைப்பழத்துடன் சர்க்கரை சேர்த்து அரைக்கவும். பேக்கிங் ட்ரேயில் எண்ணெய் தடவி மாவு தட்டி தயாராக வைக்கவும். அவனை 190C’ல் முற்சூடு செய்யவும்.
ராகி மாவுடன்
மைதா
பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மூன்று முறை சலித்து வைக்கவும்.
பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி கலக்கவும்.
அதனுடன் அரைத்த வாழைப்பழக் கூழ்
எண்ணெய் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இந்தக் கலவையை மாவுக் கலவையுடன் சேர்த்து கட்டியில்லாமல் (ஒரே திசையில்) கலக்கவும். (அதிகமாக கலக்க வேண்டாம். மாவு நன்றாக கட்டியில்லாமல் ஒன்றுபோல கலந்து வந்தால் போதுமானது). இந்த மாவுக் கலவையை ட்ரேயில் ஊற்றி மாவை சமப்படுத்த ட்ரேயை ஒரு தட்டு தட்டி அவனில் வைக்கவும்.
15 - 25 நிமிடங்கள் (உங்கள் அவனையும் பயன்படுத்தும் ட்ரேவையும் பொறுத்து நேரம் மாறுபடும்) அல்லது கேக்கின் நடுப்பகுதியில் டூத் பிக்கை விட்டு ஒட்டாமல் சுத்தமாக வந்ததும் எடுக்கவும். ஆறியதும் துண்டுகள் போடவும்.
சுவையான வாழைப்பழ ராகி கேக் தயார்.