வண்ணக் கேக்குகள்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 150 கிராம்

வெண்ணெய் - 125 கிராம்

சர்க்கரை - 150 கிராம்

முட்டை - 3

பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி

எசன்ஸ்:

வெனிலா எசன்ஸ் - சில துளிகள்

ராஸ்பெர்ரி எசன்ஸ் - சில துளிகள்

பைன் ஆப்பிள் - சில துளிகள்

கலர்:

கோகோ கலர் - சிறிது

ராஸ்பெர்ரி கலர் - சிறிது

பச்சை - சிறிது

செய்முறை:

வெண்ணெயையும் பொடித்த சர்க்கரையையும் நன்றாகக் குழைக்கவும். முட்டைகளை நன்றாக அடிக்கவும்.

மாவையும் பேக்கிங் பவுடரையும் இருமுறை சலித்துக் கொள்ளவும்.

வெண்ணெயையும் சர்க்கரையையும் குழைத்த கலவையில், அடித்த முட்டைகளை சிறிது சிறிதாக ஊற்றி தொடர்ந்து அடிக்கவும். சலித்த மாவையும் அதில் சேர்க்கவும்.

மேற்சொன்ன கலவையை மூன்று சம பிரிவாகச் செய்து கொள்ளவும்.

ஒரு பிரிவில் ராஸ்பெர்ரி கலர், ராஸ்பெர்ரி எசன்ஸ் சேர்க்கவும். ஒரு பிரிவில் பச்சைக் கலரும், பைன் ஆப்பிள் எசன்ஸ் சேர்க்கவும்.

மூன்றாவது பிரிவில் வெனிலா எசன்ஸ், கோகோ கலர் சேர்க்கவும்.

7 அங்குல கேக் பேக் செய்யும் தட்டு இரண்டு எடுத்துக் கொள்ளவும். (Check cake mould with container - செக் கேக் செய்யும் 7 அங்குல தட்டுகள் கட்டர் உடன்) தட்டுகளில் நெய் தடவி மாவு தூவிக் கொள்ளவும்.

ஒரு தட்டில் வண்ணக் கேக் அச்சை நடுவில் வைத்து ஒவ்வொரு வட்டத்திலும் ஒவ்வொரு கலர் கலவையை போடவும்.

மற்றொரு தட்டை எடுத்துக் கொண்டு வண்ண கேக் அச்சு நடுவில் வைத்து முன்பு போட்ட கலவையை மாற்றிப் போடவும். (முன்பு போட்ட தட்டில் உள்ள கலர்களை அந்த வரிசையில் இல்லாமல் இதில் மாற்று வரிசையில் போடவும்.)

கலவைகளை போட்டதும், நடுவில் உள்ள அச்சை எடுத்து விடவும்.

375 டிகிரி F சூட்டில் சுமார் 30 நிமிடம் முதல் 40 நிமிடம் வரை பேக் செய்யவும்.

கேக் பக்குவமானதும் எடுத்து ஆறவைக்கவும்.

சூடு தணிந்ததும் ஒரு கேக்கின் மேல் சிறிது ஜாம் தடவி மற்றொரு கேக்கை அதன் மேல் வைக்கவும்.

குறிப்புகள்: