ரிச் சாக்லேட் நட்ஸ் ஃப்ரூட் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 150 கிராம்

பட்டர் - 200 கிராம்

முட்டை - 200 கிராம் (3 or 4)

சர்க்கரை - 200 கிராம்

கோக்கோ அல்லது ட்ரின்கிங் சாக்லேட் பவுடர் - 50 கிராம்

பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்

வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்

ஸ்பைசஸ் - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)

(ஜாதிக்காய், ஏலம், பட்டை மிக்ஸ்)

நட்ஸ்(வால் நட்ஸ், முந்திரிப்பருப்பு) - 25 கிராம்

ஃப்ரூட்ஸ் - 25 கிராம்

(டூட்டி ஃப்ரூடி, உலர் திராட்சை, ட்ரை மிக்ஸ்ட் ஃப்ரூட்)

பாதாம் எசன்ஸ் - 2 ட்ராப் (விருப்பப்பட்டால்)

ஆரஞ்சு ஜூஸ் - 2 டேபிள் ஸ்பூன்

ஒயின் - 2 டீஸ்பூன்( விருப்பப்பட்டால்)

தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

க்ளிசரின் - 1 டீஸ்பூன்

செய்முறை:

மைதா மாவு, பேக்கிங் பவுடர், ஸ்பைசஸ், சாக்லேட் பவுடர் எல்லாம் சேர்த்து மும்முறை சலித்து தனியே வைத்துக்கொள்ளவும். சர்க்கரையை பொடித்து வைக்கவும். பேக்கிங் ட்ரேயை பட்டர் பேப்பர் போட்டு, எண்ணெய் தடவி மாவு தூவி தட்டி ரெடி பண்ணிக்கொள்ளவும்.

நட்ஸ் மிக்ஸியில் கொரகொரவென்று திரித்துக்கொள்ளவும். ஃப்ரூட்ஸையும், நட்ஸையும் ஒரு டேபிள் ஸ்பூன் மாவில் மிக்ஸ் செய்து வைத்துக்கொள்ளவும்.

பட்டரை பீட்டரால் அடித்துக்கொண்டு, பொடித்த சர்க்கரையையும் சேர்த்து அடிக்கவும்.(fluffy)

முட்டையையும் பட்டர் சர்க்கரை கலவையுடன் சேர்த்து அடித்துக்கொள்ளவும், தயிர் சேர்க்கவும், வெனிலா எசன்ஸ், பாதாம் எசன்ஸ் சேர்க்கவும், கிளிசரின் சேர்க்கவும். மிக்ஸ் செய்யவும்.

பின்பு சலித்த மாவை பட்டர், சர்க்கரை, முட்டை கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக சேர்த்து பிரட்டவும்(fold in one direction).

அடுத்து ஃப்ரூட்ஸ், நட்ஸ் கலந்த மாவை போட்டு கலந்து கொள்ளவும். இப்பொழுது கேக் மாவு ரெடியாகி விட்டது.

முற்சூடு செய்த அவனில் பேக்கிங் ட்ரேயில் கேக் மாவை விட்டு 170 - 180 டிகிரியில் 35 - 40 நிமிடம் வைத்து எடுக்கவும். கேக் நன்றாக ஆறியவுடன் கட் செய்து பரிமாறவும்.

சுவையான ரிச் சாக்லேட் நட்ஸ் ஃப்ரூட் கேக் ரெடி.

குறிப்புகள்:

நட்ஸ், ஃப்ரூட் சேர்க்காமலும் ப்ளைன் சாக்லேட் கேக் செய்யலாம். தயிர், கிளிசரின், எசன்ஸ், ஸ்பைசஸ் விருப்பப்பட்டால் சேர்க்கலாம். பேக்கிங் க்ளாஸில் ட்ரை பண்ணினோம் நன்றாக வந்தது. சாக்லேட் கோக்கோ பவுடர் கூட்டியோ குறைத்தோ அவரவர் டேஸ்ட் தகுந்தபடி உபயோகிக்கவும். ஆனால் மொத்த மாவோடு மிக்ஸ் செய்து சலித்துக் கொள்ளவேண்டும்.