ரிங் பிஸ்கட்டுகள் மற்றொரு வகை
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 115 கிராம்
வெண்ணெய் - 55 கிராம்
சர்க்கரை - 55 கிராம்
முட்டை - ஒன்று
துண்டுகளாக்கிய முந்திரிப் பருப்பு - 30 கிராம்
பாதாம் எசன்ஸ் - சில துளிகள்
பால் - தேவையான அளவு
செய்முறை:
மைதா மாவை சலித்து வெண்ணெயை அதனுடன் சேர்த்து ரொட்டித்தூள் போல் ஆகும் வரை கலக்கவும்.
பொடித்த சர்க்கரை சேர்க்கவும்.
மஞ்சள் கருவை அடித்து மாவுடன் சேர்த்து எசன்ஸ் சேர்த்து பூரி மாவு போல பிசையவும். தேவையானால் பால் சேர்க்கவும்.
மாவினை அப்பளம் போல் தேய்த்து, வட்டமான பிஸ்கட் அச்சினால் வெட்டவும்.
ஒவ்வொரு பிஸ்கட் நடுவிலும் ஒரு சிறு பாட்டில் மூடியினால் அரை அங்குல அகலத் துளைபோடவும்.
நெய் தடவி மாவு தூவிய தட்டில் பிஸ்கட்களை அடுக்கவும்.
பிஸ்கட்டுகளின் மேல் முட்டை வெள்ளையை ஒரு பிரஷ் கொண்டு தடவி முந்திரித் துண்டுகளை மேலே தூவவும்.
350 டிகிரி F சூட்டில் சுமார் 15 நிமிடம் வரை பேக் செய்யவும்.