மைக்ரோவேவ் ஜாம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

1. ஸ்ட்ராபெர்ரி / செர்ரி / எதாவது பெர்ரி வகை பழம் - 1/2 கிலோ

2. சர்க்கரை - 1/4 கிலோ (இல்லை உங்க விருப்பம் போல்)

3. எலுமிச்சை - 1

செய்முறை:

பழத்தை நன்றாக சுத்தம் செய்து, துண்டுகளாக வெட்டவும். ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் பழத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து 4 அல்லது 5 நிமிடம் "ஹய்"ல் வைக்கவும்.

பழம் சற்று சாப்ட் ஆனதும், சர்க்கரை கலந்து 10 - 15 நிமிடம் மீண்டும் "ஹய்"ல் வைக்கவும். (இடையில் அடிக்கடி கிளரி விடவும். பதமும் பார்க்கவும்.)

ஜாம் பதம் வந்ததும் எடுத்து குளிர வைத்து பாட்டிலில் போட்டு பிரிஜ்ஜில் வைக்கவும்.

குறிப்புகள்:

பழத்தின் அளவு, மைக்ரோவேவின் பவர் பொருத்து நேரம் மாறுபடும். அடிக்கடி சரி பார்க்கவும். தேவைப்பட்டால் கடைசியாக வென்னிலா எஸன்ஸ் சேர்த்து கலக்கவும்.