முள்ளெலி கேக் டெகரேஷன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஃபாண்டன்ட் ஐசிங் சுகர் கலரிங் - பச்சை

சிவப்பு

கருப்பு ஸ்னாப் லாக் பாக் (snap lock bag) மெல்லிய கத்தரிக்கோல் சிறிய பார்ட்டி ஸ்ட்ரா / ரைட்டிங் நொசில் சாக்லேட்கள் (விரும்பினால்)

செய்முறை:

மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

தேவையான நிறம் கிடைக்கும் வரை ஃபாண்டன்ட்டிற்கு கருப்பு

சிவப்பு நிறங்களைச் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு பிசைந்து எடுக்கவும். (கலரிங் அதிகமானால் சுவை நன்றாக இராது.) ஒரு பிடி அளவு ஃபாண்டன்ட் எடுத்துக் கொள்ளவும். மேசையிலும் கைகளிலும் சிறிது ஐசிங் சுகர் தூவிக் கொண்டு முட்டை வடிவம் ஒன்று செய்துக் கொள்ளவும். (விரும்பினால் உள்ளே சாக்லேட்

க்ளேஸ்ட் ட்ரை ப்ரூட் இப்படி ஏதாவது வைத்துக் கொள்ளலாம்.) அதன் சிறிய முனையை மேலும் கூராக்கி எடுக்கவும்.

கூரான முனையிலிருந்து சிறிது தள்ளி ஆரம்பித்து காட்டியுள்ளது போல் கத்தரிக்கோலால் உடல் முழுவதும் முள்ளுகளைக் கவனமாக வெட்டி விடவும்.

ஸ்ட்ராவைக் கொண்டு கண்களை அழுத்தி விடவும். (குட்டி முள்ளெலிக்கு ரைட்டிங் நொசில் (no 0) கொண்டு வைக்கலாம்.)

கத்தரிக்கோல் விளிம்பினால் வாயை வரைந்துக் கொள்ளவும்.

மூக்கையும் கத்தரிக்கோல் கூரினால் அழுத்திக் கொள்ளவும்.

முள்ளெலி கேக் டெகரேஷன் தயார்.

குட்டி முள்ளெலிக்கு உடல் கொஞ்சம் குண்டாகவும் மூக்கு சின்னதாகவும் வைத்துக் கொண்டால் அழகாக இருக்கும். இது ஆல்பினோ - வெள்ளையாக இருக்கிறது.

முன்பே செய்து வைப்பதனால்

ஐசிங் வடிவங்களை உயரமான மெஷ் போன்ற தட்டில் காற்றோட்டமாக வைத்து உலர விடவும். (உலர்ந்த பின்பு ஸ்டோர் செய்ய வேண்டியிருந்தாலும் இப்படி ஒரு தட்டோடு டப்பாவில் வைத்து கூடவே இரண்டு சிலிக்காஜெல் பாக்கெட்டுகளைப் போட்டு வைத்தால் ஈரலிப்பை உறிஞ்சிவிடும்.)

சிறிது சீனியை ஒரு ஸ்னாப் லாக் பையில் எடுத்து சில துளிகள் பச்சை நிறம் சேர்த்துக் கொள்ளவும்.

பாக்கை மூடி கலரிங்கை சீனியோடு கலந்து எடுக்கவும்.

தட்டில் சீனியைப் பரவி முள்ளெலிகளை வைத்து சாப்பாட்டு மேசையில் அலங்காரமாக வைக்கலாம். அல்லது கேக் டெக்கரேஷனாகப் பயன்படுத்தலாம்.

கடைசிப் படத்தில் புல்லுக்கு

சீனிக்குப் பதிலாக சைவ்ஸ் வைத்திருக்கிறேன்.

குறிப்புகள்: