முட்டை மஃபின்





தேவையான பொருட்கள்:
1. முட்டை - 6
2. ஷ்ரெட்டட் சீஸ் - 6 தேக்கரண்டி
3. உப்பு, மிளகு - சுவைக்கு
4. பொடியாக நறுக்கிய வெங்காயம்
5. பொடியாக நறுக்கிய குடை மிளகாய்
6. கொத்தமல்லி
செய்முறை:
அவனை 180 - 200C’ல் முற்சூடு செய்யவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை ஒடைத்து ஊற்றி அதில் உப்பு, மிளகு சேர்த்து கலந்து வைக்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்கயம், குடைமிளகாய், கொத்தமல்லி கலந்து விடவும்.
6 மஃபின் மோள்டுகளில் எண்ணெய் தடவி பின் இந்த கலவை ஊற்றி சிறிது சீஸை மேலே தூவி விடவும்.
முற்சூடு செய்த அவனில் வைத்து 15 - 20 நிமிடம் பேக் செய்யவும்.
சுவையான முட்டை மஃபின் தயார்.
குறிப்புகள்:
விரும்பினால் 1/2 கப் பாலும் முட்டையுடன் செர்த்து அடிக்கவும். குழந்தைகளுக்கு ஆம்லெட்டாக போடுவதை விட இப்படி கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். பார்ட்டிக்களுக்கும் ஏற்ற உணவு. இதில் கீரை, பயிறு வகைகள், கறி வகைகள் (சிக்கன், மட்டன், டூனா மீன்கள்) என எதை விரும்பினாலும் சேர்க்கலாம். காய்கறிகள், கீரையை சமைக்காமல் நேரடியாக சேர்க்கலாம். கறி வகைகளை தவாவில் சமைத்து விட்டு முட்டையை ஊற்றும் முன் மஃபின் மோள்டுகளில் போட்டுவிட்டு ஊற்றலாம்.