மில்க் மெயிட் கேக் (2)
தேவையான பொருட்கள்:
மில்க் மெயிட் - 1 ரின்
மாஜரீன் - 500 கிராம்
சீனி - 400 கிராம்
மைதாமா -500 கிராம்
பேரீச்சம்பழம் - 250 கிராம்
பேக்கிங்பவுடர் - 2 மேசைக்கரண்டி
ஆப்பச்சோடா - 1 தேக்கரண்டி
முந்திரி - 100 கிராம்
திராட்சை - 100 கிராம்
பால் - 1/2 கப்
செய்முறை:
பேரீச்சம்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கவும்.
ஆப்பச்சோடாவை லேசான சுடு நீரில் கரைத்து வெட்டிவைத்துள்ள பேரீச்சம்பழத்தின் மேல் ஊற்றி 1/2 மணி நேரம் ஊறவிடவும்.
மாவுடன் பேக்கிங் பவுடரைக் கலந்து 5 அல்லது 6 முறை சலித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முந்திரியை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
மாஜரீனையும் சீனியையும் சேர்த்து க்ரீமாகும் வரை நன்கு அடிக்கவும்.
அக்கலவைக்குள் மில்க்மெயிட்டை ஊற்றி, அதே ரின்னில் 1/2 பங்கு தண்ணீர் ஊற்றி, பாலையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்பு மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மரக்கரண்டியால் கலக்கவும்.
பேரீச்சம்பழம், முந்திரி, திராட்சையையும் சேர்த்துக் கலக்கவும்.
அவனை முன் கூட்டியே சூடுப்படுத்தி வைக்கவும்.
கலவையை கேக் ட்ரேயில் ஊற்றி 175 ப்ரனைட் டிகிரியில் 45 நிமிடம் மட்டும் பேக் செய்யவும்.
நன்கு ஆறிய பின்பு சிறு துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும்.
குறிப்புகள்:
முட்டை சாப்பிடாதவர்கள் இந்தக் கேக்கை செய்து சாப்பிடலாம்.