மிருதுவான கேக்
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 100 கிராம்
வெண்ணெய் - 80 கிராம்
பொடித்த சர்க்கரை - 100 கிராம்
பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி
முட்டை - 2
வெனிலா எசன்ஸ் - சில துளிகள்
செய்முறை:
வெண்ணெய், பொடித்த சர்க்கரை இரண்டையும் மிருதுவாக ஆகும் வரை நன்கு குழைக்கவும்
அதாவது நன்கு குழைத்த பிறகு சிறிது கலவையை எடுத்து கரண்டியால் போட்டால் ஒரு பந்து போல் மொத்தமாக உருட்டிக் கொண்டு விழ வேண்டும்.
மாவையும் பேக்கிங் பவுடரையும் இரு முறை மாவு சல்லடையினால் சலிக்கவும்.
முட்டையை நன்கு அடிக்கவும்.
பிறகு சிறிது சிறிதாக வெண்ணெயையும் சர்க்கரையையும் குழைத்த கலவையில் முட்டையை ஊற்றிக் கொண்டே விடாது கலந்து எசன்ஸ் சேர்க்கவும்.
சலித்த மாவை சேர்த்து இலேசாக விரல்களின் நுனியால் கலக்கவும்.
கலவை தளர்த்தியாக இருக்க வேண்டும். தேவையானால் பால் சேர்க்கவும்.
8 அங்குல கேக் பேக் செய்யும் தட்டில் நெய் தடவி, மாவு தடவி கலவையை அதில் போடவும்.
380 டிகிரி F சூட்டில் சுமார் 30 முதல் 40 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.
கேக் பக்குவமானதும் வெளியே எடுத்து வேறு தட்டில் போட்டு ஆற வைக்கவும்.