மாங்காய் ஜாம் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெரிய மாங்காய் - 2

சீனி - 4 கப்

சிட்ரிக் அமிலம் - 1/2 தேக்கரண்டி

சோடியம் பென்சொயேட் - 1 சிட்டிகை

செய்முறை:

மாங்காய் தோலை நீக்கி விட்டு சிறிது சிறிதாக சீவிக் கொள்ளவும்.

அதை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

மாங்காய் நன்கு வெந்ததும் அதனுடன் சீனியை கலந்து நன்கு கிளறவும்.

ஜாம் பதம் வருவதற்கு முன்பு, சிட்ரிக் அமிலம் சேர்க்கவும்.

நன்கு ஜாம் பதம் வந்தபிறகு சோடியம் பென்சொயேட் சேர்த்து கிளறி இறக்கவும்.

தேவைப்பட்டால் கலர் பவுடர் சேர்க்கலாம்.

குறிப்புகள்: