மரவள்ளிக்கிழங்கு கேக்





தேவையான பொருட்கள்:
மரவள்ளிக்கிழங்கு - ஒரு கிலோ தேங்காய் (சிறியது) - ஒன்று நெய் - 50 கிராம் மைதா - கால் கப் சீனி - ஒன்றரை கப் உப்பு - கால் தேக்கரண்டி மஞ்சள் கலர் பவுடர் - சிறிது
செய்முறை:
மரவள்ளிக்கிழங்கை கேரட் துருவியால் துருவிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி வைக்கவும்.
மிக்சியில் மரவள்ளிக்கிழங்குடன்
தேங்காய் துருவல் சேர்த்து
அரை கப் தண்ணீரில் மைதாவை கரைத்து அதில் ஊற்றி அரைக்கவும்.
பிறகு சீனி
நெய்
உப்பு
கலர் பவுடர் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கலவையை நெய் தடவிய தட்டில் ஊற்றவும்.
அவனில் வைத்து பேக் செய்து எடுக்கவும்.
சுவையான மரவள்ளிக்கிழங்கு கேக் தயார். ஆறிய பின்பு துண்டுகளாகப் போடவும். இதை கிழங்கடை என்றும் சொல்வார்கள்.