ப்ளு பெரி ப்ரெட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 200 கிராம்

சர்க்கரை - 150 கிராம்

பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி

முட்டை - 2

பால் - 120 மிலி

உப்பு - ஒரு கிள்ளு

வெண்ணெய் - 115 கிராம்

ப்ளு பெரி - ஒரு கைப்பிடி

வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி

எலுமிச்சை ஜெஸ்ட் (துருவிய தோல் ) - ஒரு தேக்கரண்டி

------------------------------------------------------------------------

தேவை எனில் லெமன் க்ளேஸ் ( லேயர் ) செய்ய :

------------------------------------------------------------------------

எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி

சர்க்கரை - 2 தேக்கரண்டி

செய்முறை:

வெண்ணெயை அறை வெப்பநிலையில் உருக்கிக் கொள்ளவும். மஞ்சள் எலுமிச்சை தோலை துருவிக் கொள்ளவும். மைதாவை பேக்கிங் பவுடருடன் சலித்து உப்பு சேர்த்துக் கொள்ளவும். லெமன் ஜெஸ்ட் மற்றும் ப்ளு பெரியை சிறிது மாவுடன் கலந்துக் கொள்ளவும். இதனால் பழம் வேகும் போது பாத்திரத்தின் அடியிலேயே தங்கி விடாது.

முதலில் வெண்ணெயை பாத்திரத்தில் போட்டு நன்கு குழைய அடிக்கவும்.

பின் அதில் சர்க்கரையை சேர்த்து நன்கு பேஸ்ட் போல அடித்துக் கொள்ளவும்.

வெனிலா எசன்ஸ் சேர்த்து முட்டையை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு அடித்து கொள்ளவும்.

கலவையில் பால் மற்றும் மைதா கலவையை மாறி மாறி கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கவும். மாவு சேர்த்த பின் அதிகப்படியாய் அடித்து கலக்கக் கூடாது. அடித்து கலந்தால் ரப்பர் போல ஆகிவிடும்.

இதில் ப்ளு பெரி மற்றும் லெமன் ஜெஸ்ட்டை சேர்த்து கலக்கவும்.

பின் ப்ரெட் லோப் ட்ரேயில் மாவினை ஊற்றி சமநிலைப்படுத்தவும். 350 டிகிரியில் முற் சூடு செய்யப்பட்ட அவனில் அரை மணி நேரம் வைக்கவும்

ப்ரெட் நன்கு பொன்னிறமானதும்

வெளியே எடுத்து ஆற வைக்கவும்.

பக்குவமாக ட்ரேயில் இருந்து தலைகீழாக கவிழ்க்கவும். ப்ரெட்டின் மேற்புறம் லெமன் க்ளேசை தடவவும்.

துண்டுகள் போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: