போர்ன்விடா கேக்
0
தேவையான பொருட்கள்:
போர்ன்விடா - முக்கால் கப்
கன்டன்ஸ்ட் மில்க் - ஒரு டின் (400 கிராம்)
சர்க்கரை பொடி செய்ததது - 2 கப்
வெண்ணை - ஒரு கப்
மைதா - அரைக் கப்
செய்முறை:
ஒரு கனமான பாத்திரத்தில் எல்லாப் பொருட்களையும் நன்றாக, ஒரு சிறு கட்டி கூட இல்லாமல் கலக்கவும்.
பிறகு அடுப்பில் வைத்து கை விடாமல் கிளறவும். அடுப்பை நிதானமாக எரிய விட்டு, அடியில் சிறிது கூடப் பிடிக்காமல் கிளற வேண்டும்.
நன்றாக கெட்டியாகி, ஒரு துளி தண்ணீரில் விட்டால் உருட்டும் பதம் வந்ததும், இறக்கவும். கீழே இறக்கின பிறகும் நன்கு இறுகும் வரை கிளறவும்.
அதன் பின்னர் நெய் தடவிய தட்டில் கொட்டித் துண்டு போடவும்.
குறிப்புகள்:
இதற்கு ஓவல், பூஸ்ட், மால்டோவா முதலியவை இருந்தாலும் உபயோகிக்கலாம்.