பனானா ஓட்ஸ் மஃபின்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கனிந்த‌‌ வாழைப்ப‌ழ‌ம் - ‍ 3 (அ) 4 ஆல்ப‌ர்ப்ப‌ஸ்/மைதா மாவு ‍- 2 கப் ஓட்ஸ் - அரை கப் ச‌ர்க்க‌ரை - முக்கால் க‌ப் பேக்கிங் சோடா – முக்கால் தேக்க‌ர‌ண்டி பேக்கிங் பவுடர் – முக்கால் தேக்க‌ர‌ண்டி எண்ணெய் - 1/3 க‌ப் உப்பு – அரை தேக்க‌ர‌ண்டி பட்டர் ஸ்காச் சாக்லெட் சிப்ஸ் - ‍அரை கப்

செய்முறை:

தேவையான பொருட்களை தயாராக வைக்கவும். அவனை 375 டிகிரியில் முற்சூடு செய்யவும். மஃபின் ட்ரேயை லைனர்ஸ் போட்டு தயாராக வைக்கவும். மைதா

பேக்கிங் சோடா

பேக்கிங் பவுடர்

உப்பு நான்கையும் ஒன்றாக சேர்த்து ச‌லித்து வைத்துக் கொள்ள‌வும். அதனுடன் ஓட்ஸை சேர்த்து கலந்துவிடவும். வாழைப்ப‌ழ‌த்தை தோலுரித்து ஒரு பாத்திர‌த்தில் போட்டு

முள்க‌ர‌ண்டி அல்ல‌து மேஷ‌ரால் ம‌சித்துக் கொள்ள‌வும்.

மசித்த வாழைப்பழத்துடன் எண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரையும் வரை நன்றாக கலக்கி வைக்கவும்.

பின் வாழைப்பழக்க‌ல‌வையை

ஏற்கனவே கலந்து வைத்திருக்கும் மாவுக்கலவை உள்ள பாத்திர‌த்தில் போட்டு ஸ்பேட்சுலா அல்லது ம‌ர‌க்க‌ர‌ண்டியினால் அதிக அழுத்த‌ம் கொடுக்காம‌ல் க‌லந்து விட‌வும். மிக‌வும் மென்மையாக‌ ஃபோல்டிங் முறையில் க‌ல‌ப்ப‌து ரொம்ப‌ அவ‌சிய‌ம். இல்லையென்றால் ம‌ஃபின்ஸ் மென்மையாக இல்லாமல் சற்று கடினமாகிவிட வாய்ப்பிருக்கிறது.

அதனுடன் சாக்லெட் சிப்ஸை சேர்த்து

ம‌றுப‌டியும் ஃபோல்டிங் முறையில் கலந்து விடவும்.

இந்த கலவையை தயார் செய்து வைத்திருக்கும் மஃபின்ஸ் கப்களில் போடவும்.

முற்சூடு செய்த அவனில் வைத்து

18 ‍- 20 நிமிடங்கள் பேக் செய்யவும். (அவனைப்பொறுத்து சில நிமிடங்கள் கூட குறைய மாறுபடலாம்). முதல் 18 நிமிடங்கள் பேக் ஆனதும்

ஒரு டூத் பிக்கை உள்ளே விட்டு

அது சுத்தமாக வருகிறதா என்பதை பார்த்து

மஃபின்ஸ் முழுவதும் வெந்துவிட்டதை உறுதி செய்து கொள்ளவும். இல்லையெனில் ஓரிரு நிமிட‌ங்க‌ள் கூடுதலாக பேக் செய்து எடுக்கலாம்.

பிறகு மஃபின்ஸை எடுத்து

கம்பி ட்ரேயில் வைத்து ஆற விடவும். சுவையான

எளிதாகச் செய்யக்கூடிய பனானா ஓட்ஸ் மஃபின்ஸ் ரெடி. சாக்லெட் கலந்து செய்திருப்பதால்

குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். நமக்கும் அவர்களை ஓட்ஸ் மற்றும் வாழைப்பழம் சாப்பிட வைத்த திருப்தி கிடைக்கும்.

ப‌ட்ட‌ர் ஸ்காச் சாக்லெட் சிப்ஸ்க்கு ப‌திலாக‌

மில்க் சாக்லெட் சிப்ஸும் ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம். கூட‌வே விருப்ப‌ப்ப‌ட்டால்

பொடியாக நறுக்கிய ந‌ட்ஸ் வ‌கைக‌ளும் சேர்த்து செய்ய‌லாம். இது மில்க் சாக்லெட் சிப்ஸ் சேர்த்து செய்த பனானா ஓட்ஸ் மஃபின்ஸ்.

குறிப்புகள்: