பட்டர் பிஸ்கெட்( கொய் தாட்)
தேவையான பொருட்கள்:
பைனாப்பிள் ஜாம் - தேவையான அளவு
பவுடர் சீனி - 200 கிராம்
மைதா - 250 கிராம்
சோள மாவு 50 கிராம்
வெண்ணெய் - 200 கிராம்
முட்டை - ஒன்று
வெனிலா எசன்ஸ் - சிறு துளிகள்
செய்முறை:
ஒரு பரந்த பாத்திரத்தில் மைதா, முட்டை, சோளமாவு, வெண்ணெய், சீனி, எசன்ஸ் முதலியவற்றை போட்டு நீர் விடாமல் பிசைந்து எடுக்கவும்.
பின்னர் இந்த மாவை நீட்டமாக பரத்தி அதில் பிஸ்கட் அச்சு இருந்தால் அதால் கட் பண்ணி எடுத்து நடுவில் பைனாப்பிள் ஜாம் வைத்து 180 டிகிரி சென்டிக்ரேடில் 15 நிமிடம் வைத்து பேக் பண்ணவும்.
ஆறிய பிறகு, எடுத்து டின்னில் வைக்கவும். இது ஒரு வாரம் வரை கெடாது.
குறிப்புகள்:
பெருநாள் காலங்களில் மலேசியா, சிங்கப்பூரில் இந்த பிஸ்கெட் செய்வார்கள். இது இங்க ரொம்ப பேமஸ், செய்வது எளிது.
பிஸ்கட் அச்சு இல்லாவிட்டால் ஷிறி பெட் தண்ணீர் பாட்டிலின் மூடியால் கட் பண்ணவும்.
பைனாப்பிள் ஜாம் அல்லது உங்களுக்கு விருப்பப்பட்ட சுவையுள்ள ஜாம் பயன்படுத்தலாம்.