பட்டர் குக்கிஸ்
தேவையான பொருட்கள்:
வெண்ணெய் - 225 கிராம்
மைதா மாவு - 3 கப்
ஜீனி - அரை கப்
முட்டை - 1
பாதாம்பருப்பு - அரை கப்
பேகிங் பவுடர் - அரை தேக்கரண்டி
செய்முறை:
சீனியை நன்கு பொடி செய்து கொண்டு, வெண்ணெயுடன் கலந்து கொள்ளவும்.
முட்டையை உடைத்து மஞ்சள் கருவை மட்டும் தனித்து பிரித்து சீனியுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
மாவினை பேகிங் பவுடருடன் கலந்து சலித்துக் கொண்டு சீனி, முட்டை கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து கெட்டியான மாவாய் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
மாவினை சில மணி நேரங்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் வைத்தோ அல்லது மூடி வைத்தோ இறுகவைக்கவேண்டும்.
அதன்பிறகு எடுத்து மாவினை உருட்டி தேவையான வடிவங்களில் வெட்டிக் கொள்ளவும்.
வெட்டிய துண்டுகளை ஒரு வெண்ணெய் அல்லது எண்ணெய் தடவிய தட்டில் அடுக்கிக் கொள்ளவும்.
குக்கிஸ்களின் மீது முட்டையின் வெள்ளை கருவினை லேசாகத் தடவி அதன் மேல் நறுக்கிய பாதாம் பருப்புத் துகள்கள் மற்றும் சீனியைத் தூவி அலங்கரிக்கவும்.
தட்டினை எடுத்து அவனில் வைத்து 350 டிகிரி பாரன்ஹீட்டில் 15 நிமிடங்கள் வைத்திருந்து குக்கீஸ் வெந்ததும் எடுக்கவும்.