திராட்சை ஆரஞ்சு ரொட்டி
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 220 கிராம்
பொடித்த சர்க்கரை - 120 கிராம்
உலர்ந்த விதையில்லாத திராட்சை - 50 கிராம்
சமையல் சோடா - அரைத் தேக்கரண்டி
பேகிங் பவுடர் - ஒன்றரைத் தேக்கரண்டி
வெண்ணெய் - 60 கிராம்
ஆரஞ்சு பழத்தோல் - அரை தேக்கரண்டி (துருவியது)
ஆரஞ்சு பழரசம் - இரு பழங்களுடையது
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
ஆரஞ்சு பழத்தின் மேல் தோலை மட்டும் எடுத்து கொப்பரைத் துருவியில் துருவிக் கொள்ளவும்.
மைதா மாவு, சோடா, பேக்கிங் பவுடர், சிட்டிகை உப்பு இவைகளை சலிக்கவும்.
வெண்ணெயை சலித்த மாவுடன் சேர்த்து ரொட்டித்தூள் போல் ஆகும் வரை விரல்களின் நுனியால் கலக்கவும்.
பொடித்த சர்க்கரை, உலர்ந்த திராட்சை பழங்கள், ஆரஞ்சு தோல் இவற்றை சேர்க்கவும்.
பாலும், ஆரஞ்சுப் பழரசமும் சேர்த்துக் கொள்ளவும். கலவை சிறிது தளர்த்தியாக இருக்க வேண்டும்.
நெய் தடவி, மாவு தூவிய பேக் செய்யும் பாத்திரத்தில் போட்டு 350 டிகிரி F சூட்டில் சுமார் 30 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
பிறகு 355 டிகிரி சூட்டில் சுமார் 20 இருந்து 30 நிமிடம் வரை பேக் செய்யவும்.