தக்காளிப்பழ ஜாம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தக்காளி - 750 கிராம் சீனி - 100 கிராம் வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி (விருப்பமென்றால்) எலும்பிச்சம்பழப்புளி - 4 துளி

செய்முறை:

தக்காளி பழங்களை கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். மற்ற பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

தக்காளிப்பழங்களை ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மேல் கொதித்த நீரை ஊற்றவும்.

கொதித்த நீரை ஊற்றிய பின்னர் ஒரு தட்டை வைத்து 5 நிமிடம் மூடி வைக்கவும்.

5 நிமிடத்திற்கு பிறகு எடுத்து தோலை நீக்கி சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி ஒரு அடிகனமான பாத்திரத்தில் போடவும்.

பின்னர் தக்காளியுடன் சீனியை சேர்த்து நன்றாக கலக்கவும்.

அதன் பிறகு அடுப்பில் வைத்து அடிப்பிடிக்க விடாமல் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும்.

கரண்டியால் கலவையை எடுத்து பார்க்கும் பொழுது கெட்டியாக விழ வேண்டும். அதுவே ஜாமின் பதம். இந்த பதம் வந்ததும் இறக்கவும். விருப்பப்பட்டால் இறக்கும் முன்பு வெனிலா எசன்ஸை சேர்த்து கிளறவும்.

நன்றாக ஆறிய பின்பு 4 துளி எலும்பிச்சம்பழப்புளி சேர்க்கவும். பின்பு ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டு குளிர்சாதனப்பெட்டியில் வைத்து தேவையான போது பயன்படுத்தவும். இந்த தக்காளிப்பழ ஜாம் குறிப்பினை செய்து காட்டியவர் திருமதி. வத்சலா நற்குணம் அவர்கள். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

குறிப்புகள்: