ஜிஞ்சர் நட்ஸ் குக்கீஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மா - 4 கப்

சீனி - 2 கப்

மாஜரீன் - 1 1/4 கப்

பொடித்த கச்சான் (வேர்க்கடலை) - 1/4 கப்

பொடித்த கஜு - 1/4 கப்

இஞ்சி சாறு - 2 அல்லது 3 மேசைக்கரண்டி

வேர்கொம்பு தூள் (சுக்கு தூள்)- 3 தேக்கரண்டி

உப்பு - 1/4 தேக்கரண்டி

பேக்கிங் பவுடர் - 1/4 தேக்கரண்டி

வனிலா எசன்ஸ் - சில துளிகள்

செய்முறை:

மைதா மா, உப்பு, பேக்கிங் பவுடர், வேர்கொம்புத்தூளை கலந்து அரித்து (சலித்து) வைக்கவும்.

சீனியை மாவாக்கவும்.

மாஜரீன், மாவாக்கிய சீனி, இஞ்சி சாறு மூன்றையும் நான்கு கலந்து அடிக்கவும்.

பின்னர் இதனுள் மாக்கலவையை சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு, அதிக அழுத்தம் கொடுக்காமல் குழைக்கவும். (தேவைப்படின் சிறிது இளம் சூடான பாலை சேர்க்கவும்)

பின்னர் பொடித்த கச்சான் (வேர்க்கடலை), கஜு , வனிலா எசன்ஸ் சேர்த்து குழைக்கவும்.

பின்னர் இந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சிறிது தட்டையாக்கி பட்டர் பூசிய பேக்கிங் தட்டில் இடை வெளி விட்டு அடுக்கவும்.

பின்னர் 300 Fஇல் 15-20 நிமிடங்களுக்கு அல்லது வேகும் வரை பேக் செய்யவும்.

நல்ல மொறு மொறுப்பான குக்கீஸ் தயார். சூடு ஆறியதும் பரிமாறவும்.

குறிப்புகள்: