ஜாம் ஜெல்லி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் - ஒன்று

வாழைப்பழம் - ஒன்று

நறுக்கிய மாம்பழம் - ஒரு கப்

நறுக்கிய கொய்யாப்பழம் - ஒரு கப்

சர்க்கரை - அரை கப்

செய்முறை:

ஆப்பிளை தோல் சீவிவிட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வாழைப்பழத்தையும் அதைப் போல நறுக்கிக் கொள்ளவும்.

மிக்ஸியில் அனைத்து பழங்களையும் சேர்த்து போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.

நன்கு கிளறினால் அது ஜெல்லி பதத்திற்கு வரும், எடுத்து பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

குறிப்புகள்: