சூரியகாந்தி கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வட்டமான கேக் (22 Cm ரிங் கேக்) Stiff Consistency Icing - நர்மதாவின் குறிப்பில் உள்ள அளவின்படி ஒன்றரை மடங்கு ஃபூட் கலர் - மஞ்சள் சாக்லெட் சிப்ஸ் - ஒரு மேசைக்கரண்டி ஃபாண்டன்ட் - 300 கிராம்ஸ் சாக்லெட் ஹெய்ல் ஐசிங் சுகர் - அரை கப் ஜிஞ்சர் பிஸ்கட் - ஒன்று (தேவையானால்) உபகரணங்கள்: டர்ன் டேபிள் (Turn table) பாலட் நைஃப் Nozzle No 64 & பைப்பிங் பாக் கிச்சன் ஃபாயில் (Kitchen Foil) கிச்சன் சிஸ்ஸர் (Kitchen Scissors) இதழ் கட்டர்

செய்முறை:

இதழ் கட்டருக்கு எலெக்ட்ரிக்ட் ஒப்பனரால் திறந்த புதிய வெற்று தகரடப்பா ஒன்றை சுத்தமாகக் கழுவித் துடைத்து

(கையை வெட்டிக் கொள்ளாமல்) படத்தில் காட்டி இருப்பது போல் அழுத்தி எடுக்கவும். அடிப்பக்கம் வளைந்திருந்தாலும் ஃபாண்டண்ட் வெட்டுவதில் சிரமம் எதுவும் இராது.

இரண்டு மூன்று நாட்கள் முன்பாகவே வெளி இதழ்களைச் செய்து உலர வைப்பது முக்கியம். கடைசியாக பொருத்தும் சமயம் ஒன்றிரண்டு உடைந்துவிடக்கூடும். தேவைக்கு மேல் செய்து வைத்தால் நல்லது. இதழ்கள் செய்வதற்கு முதலில் சுருக்கங்கள் நீளமாக வருவது போல ஃபாயில் பேப்பரை சுருக்கி

மெதுவாக பிரிக்கவும். இதழ் அளவுக்கு வரும் விதமாக இரண்டு முனைகளையும் சேர்த்து சுருக்கி வைக்கவும்.

ஃபாண்டண்ட்டில் சரியான விகிதத்தில் மஞ்சள் நிறம் சேர்த்துப் பிசைந்துக் கொள்ளவும். ஈரப்பதம் அதிகமாக இருந்தால் சிறிது ஐசிங் சுகர் தூவிப் பிசைந்துக் கொள்ளவும். வேலை செய்யும் மேற்பரப்பிலும் ரோலிங் பின்னிலும் ஐசிங் சுகர் தூவிக்கொண்டு

3 மில்லிமீட்டர் கனத்துக்குத் தேய்த்து இதழ்களை வெட்டிக் கொள்ளவும். ஒன்றிரண்டு இதழ்கள் சற்று நீளம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. வெட்டி எடுத்த ஃபாண்டண்ட் இதழை சுருக்கி வைத்திருக்கும் ஃபாயில் பேப்பரின் மேல் வைக்கவும். சுருக்கம் இதழின் போக்கில் இருக்க வேண்டும். மெதுவே ஓரங்களை அழுத்தி மெல்லிதாக்கி விட்டு நடுவிலும் சற்று அழுத்தி விடவும். இப்போது கோடுகள் இதழில் பதிந்திருக்கும்.

இதழைக் கவனமாகப் பிரித்து ஐசிங் சுகர் தடவிய மேற்பரப்பில் உலரவிடவும். முப்பந்தைந்து இதழ்களாவது இருந்தால் நல்லது.

இதழ்களில் மேலே உள்ள ஐசிங் சுகரை ப்ரஷ் கொண்டு துடைத்து விடவும்.

இரண்டு பக்கமும் அமைப்பாக வந்திருக்கும் இலைகளாக

பன்னிரண்டு தெரிந்து கொண்டு கத்தரிக்கோலால் இரண்டாக வெட்டி வைக்கவும்.

இந்த கேக் அலங்காரத்திற்கு படத்தில் காட்டியுள்ள வடிவ ரிங் கேக் மோல்ட் பொருத்தமாக இருக்கும். (இதற்குப் பதிலாக குழிவான சில்வர் பவுல் பயன்படுத்தலாம். கேக்கைக் கவிழ்த்து வைத்து நடுவில் ஒரு சிறு பள்ளம் வெட்டிக் கொண்டால் போதும்).

கேக் நடுவில் பொங்கி இருந்தால் நேராக வெட்ட வேண்டும் என்பது அவசியமில்லை

குவிவாகவே இருக்கட்டும். அந்தப் பக்கம் முழுவதையும் ஐசிங் பூசி மறைக்கவும். (இது பூவின் கீழ்ப்பக்கமாக அமையும்). ஒரு கையில் பிடித்துக் கொண்டே பூசிவிடலாம். சிரமம் என்று தோன்றினால் ஒரு தட்டின் பின் பக்கம் வைத்துப் பூசிக் கொள்ளலாம்.

ஐசிங் செய்வதற்காகத் தெரிந்து வைத்துள்ள கேக் போர்டை கேக்கின் மேல் வைத்துப் பிடித்துத் திருப்பவும். இப்போது ஐசிங் பூசிய பக்கம் கீழே இருக்கும். கேக்

போர்டின் நடுவில் இல்லாவிட்டால் நகர்த்திக் கொள்ளலாம். பட்டர் ஐசிங் கலவை ஏற்கனவே செய்து வைத்திருக்கும் இதழின் நிறத்தில் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டு இரண்டாவது பக்கம் ஐசிங் பூசவும். கேக் மேற்பரப்பு மூடினால் போதும்.

சாக்லெட் சிப்ஸை மைக்ரோவேவ் செய்து இளக்கி

நடுவில் பள்ளமாக இருக்கும் இடத்தில் வட்டமாக நிரப்பவும். (ரிங் மோல்ட் பயன்படுத்தியிருந்தால் சாக்லெட் ஐசிங் பூசிய ஜிஞ்சர் பிஸ்கட் வைத்து துவாரத்தை மறைக்கலாம்).

ஈரம் உலருமுன் சிறிய கரண்டியால் சாக்லெட் ஹெய்ல் எடுத்து அதன்மேல் வைக்கவும்.

பைப்பிங் பையில் ஐசிங் நிரப்பி Nozzle 64 கொண்டு சுற்றிலும் குட்டி இதழ்கள் பை செய்யவும். (டர்ன் டேபிள் இருந்தால் உள்ளிருந்து வெளிநோக்கி இதழ்கள் சரியான அமைப்பில் வைப்பது சுலபம்). நடுவில் வைக்கும் இதழ்களைச் சிறிதாகவும்

வெளி வரிகள் வைக்கும் போது சற்றுப் பெரிய இதழ்களாகவும் வைக்கவும்.

பாதியாக வெட்டி வைத்திருக்கும் இதழ்களின் மேல்

தட்டையான ஓரத்தில் ஐசிங் பைப் செய்து கேக்கின் அடியில் வெளிப்புறம் வட்டமாக ஒட்டவும். உலரும்வரை அவற்றின் கீழ் சுத்தமான சிறிய பாட்டில்களோ

கரண்டிகளோ வைத்து விடவும்.

ஓரளவு உலர்ந்தபின்

பாட்டில்களை எடுத்துவிட்டு போர்ட்டை சுத்தம் செய்துகொண்டு

காட்டியுள்ளபடி இதழ்களின் நடுவே இடைவெளியில் ஐசிங் வைக்கவும்.

படத்தில் காட்டியுள்ளபடி முழு இதழ்களை ஒட்டவும். (சீரற்று அமைந்திருக்கும் இதழ்களை கத்தரிக்கோலால் தேவைக்கேற்ப வெட்டி எடுக்கலாம்.)

ஒரு முழு வட்டம் ஒட்டி முடிந்ததும் மீதி இதழ்களைப் பாதியாக நறுக்கிக் கொண்டு அவற்றின் பின்பக்கம் நடுவில் மட்டும் ஐசிங் வைத்து இடையில் இரண்டு வரிகள் ஒட்ட வேண்டும். பாலட் நைஃபை இதழ் மேல் வைத்து மெதுவாக சரிவாக வருமாறு அழுத்தவும். இதழ்கள் ஒன்றில் ஒன்று தாங்கிக்கொண்டு நிற்கும்.

நடுவே மேலும் சிறிது சாக்லெட் ஹெய்ல் சேர்த்து வட்டத்தைச் சரியாக்கினால் அழகான சூரியகாந்தி கேக் தயார்.

குறிப்புகள்: