சாக்லேட் கேக் (7)
0
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 200 கிராம்
வெண்ணெய் - 200 கிராம்
சீனி - 200 கிராம்
சாக்லேட் பவுடர் - 1 பெரியகரண்டி
முட்டை - 6
பேக்கிங்பவுடர் - 1 பெரியகரண்டி
செய்முறை:
மாவை சலித்துக் கொள்ளவும்
முட்டை, சீனியை நன்கு நுரை வரும் வரை கலக்கிக் கொள்ளவும்.
அதில் வெண்ணெயை போட்டு கிளறி அத்துடன் மாவு, பவுடர் போட்டு நன்கு கலக்கவும்.
பின் 280 F சூடாகிய அவனில் தட்டில் ஊற்றிய மாவை வைத்து 25 நிமிடம் கழித்து மேலே சிவந்ததும் எடுக்கவும்.
குறிப்புகள்:
கேக் சிவந்தவுடன் ஒரு கத்தியை கொண்டு நடுவில் குத்தி பார்த்தால் ஒட்டாமல் வரும் அதுதான் பதம்.