சாக்லேட் கேக் (5)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - ஒரு கப் சீனி - ஒரு கப் முட்டை - 6 பட்டர் - 250 கிராம் வென்னிலா பவுடர் - 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி கருப்பு டேப்லெட் சாக்லேட் - 200 கிராம் தண்ணீர் - 2 கரண்டி உப்பு - ஒரு சிட்டிகை சீவிய பாதாம் பருப்பு - 2 மேஜைக்கரண்டி

செய்முறை:

முதலில் தேவையான பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும். மைதாவை சலித்துக்கொள்ளவும். சீனியை அரைத்து பொடியாக்கி வைக்கவும்.

பட்டரை சிறிது நேரத்திற்கு முன்பே ஃப்ரிட்ஜிலிருந்து வெளியே எடுத்து வைக்கவும். பட்டர் மிருதுவானதும் அரைத்த சீனியுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். நன்கு க்ரீம் போன்று வரும் வரை கலக்கவும்.

சாக்லேட்டு துண்டங்களை உடைத்து ஒரு கோப்பையில் போட்டு 2 கரண்டி தண்ணீரை ஊற்றி மைக்ரோ அவனில் ஒரு நிமிடம் சூடு செய்யவும். சாக்லேட் உருகி கெட்டியான திரவமாக வரவேண்டும்.

ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி

உப்பு சேர்த்து நன்கு நுரை வரும்வரை அடித்துக் கலக்கவும். கலக்கிய முட்டையை பட்டர் சீனி கலவையில் ஊற்றி நன்கு கலக்கவும்.

அதில் பேக்கிங் பவுடர்

வென்னிலா பவுடர் சேர்த்து மேலும் கலக்கவும்.

இப்பொழுது சாக்லேட் நன்றாக உருகி இருக்கும். உருகிய சாக்லேட்டை முட்டைக் கலவையில் ஊற்றி தொடர்ந்து கலக்கவும்.

அத்துடன் சிறிது சிறிதாக மைதாவை சேர்த்து விடாது கலக்கவும். கட்டிகள் விழாமல் நன்கு கலக்கவேண்டும்.

பின்னர் ஒரு ட்ரேயில் பட்டரை தடவவும். அதில் கலக்கிய கலவையை ஊற்றவும்.

கலவை ட்ரே முழுவதும் படர்ந்தவுடன் அதன் மேல் துருவிய பாதாம் பருப்பை பரவினாற்போல் தூவவும்.

170 டிகிரி ஃபாரன்கீட்டில் முன்பே சூடுபடுத்தப்பட்ட அவனில் வைத்து வேக வைக்கவும்.

சுமார் 35 நிமிடங்கள் வேகவிடவும். கேக் வெந்தவுடன் நன்கு மேலெழும்பினாற்போல் வரும்.

கேக் நன்கு வெந்தது பார்த்து அவனில் இருந்து எடுத்து துண்டங்கள் போடவும்.

குறிப்புகள்: