க்ரீம் கப் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை - இரண்டு மைதா - ஒரு கப் சர்க்கரை - அரை கப் பட்டர் - நூறு கிராம் பால் - அரை கப் வென்னிலா பவுடர் - ஒரு தேக்கரண்டி அலங்கரிக்க: ஜெல்லி கம் கேண்டி - கொஞ்சம் கேக் டெக்கரேசன் ஸ்டிக் - கொஞ்சம் கிரீம் செய்ய: கூலிங் பால் - நூறு மில்லி விப்பிங் க்ரீம் பவுடர் - முப்பது கிராம்

செய்முறை:

முதலில் தேவையானதை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு அடிக்கவும். அதில் சீனியை போட்டு நன்கு அடிக்கவும். பின்னர் வென்னிலா பவுடர் பட்டர் சேர்த்து நன்கு அடிக்கவும்.

பின் அதில் மைதாவை சிறிது சிறிதாக சேர்த்து பால் சேர்த்து நன்கு பீட்டரால் அடிக்கவும்.

பின்னர் கேக் ட்ரேயில் ஊற்றி அவனில் வேக வைத்து எடுக்கவும்.

கிரீம் செய்வது: கூலிங்கான பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி இந்த விப்பிங் பவுடரை போட்டு நன்கு பீட்டரால் அடிக்கவும்.

நன்கு அடித்தவுடன் படத்தில் உள்ளது போல் கிரீம் வரும்.

பின் இந்த கிரீமை வேக வைத்து எடுத்த கேக்கின் மேல் தடவி அலங்கரிக்கவும்.

நியூ இயரை கொண்டாட சுவையான கிரீம் கப் கேக் குழந்தைகளுக்கு தயார்.

குறிப்புகள்: