கோதுமை மாவு பிஸ்கட்
0
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 1 கப்
கோதுமை மாவு - 1 கப்
நெய் - 3/4 கப்
சர்க்கரை பொடி - 1 கப்
உப்பு - 1 சிட்டிகை
தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
மேலே சொன்ன எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்ந்து பிசைந்து கொள்ளவும்.
அதை அப்படியே 1/4 இன்ச் கனத்திற்கு சப்பாத்தி போல தேய்த்து வட்ட வட்டமாக வெட்டி நெய் தடவிய தட்டில் பரவலாக அடுக்கி அவனில் பொன்னிறமாகும் வரை பேக் செய்து பிஸ்கட் தயாரிக்கவும்.
குறிப்புகள்:
இதில் வட்டமாக வெட்ட பிஸ்கட் கட்டரை யூஸ் பண்ணலாம்.
அவனை ப்ரீஹீட் பண்ணியும் பேக் பண்ணலாம்.