கேரட் பனானா கேக் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா – 125 கிராம்

சர்க்கரை- 150கிராம்

முட்டை-2

எண்ணை-125மிலி

கேரட்துருவல்-125கிராம்

வாழைப்பழம்-1(சிறியது)

பேக்கிங் பவுடர்-1/4 டீஸ்பூன்

பேக்கிங் சோடா-சிட்டிகை

உப்பு-சிட்டிகை

வெனிலா எசன்ஸ்- 1டீஸ்பூன்

செய்முறை:

1.முதலில் சர்க்கரையை பொடிக்கவும்

2.மைதா,பேக்கிங் பவுடர்,சோடா,உப்பு சலிக்கவும்.

3.பேக்கிங் ட்ரேயில் எண்ணை தடவி மாவு கலவை சிறிது தூவி பரப்பவும்

தடவி மாவு கலவை சிறிது தூவி பரப்பவும்

.அவனை 350F முற்சூடு செய்யவும்.

4..முட்டையை முதலில் வெள்ளைகருவை பீட்டரில் தயிர்பதத்திற்கு அடிக்கவும்.

5.பின் அதில் மஞ்சள் கரு,வெனிலா எசன்ஸ் சேர்த்து நுரைக்க அடிக்கவும்.

6.பின் பொடித்த சர்க்கரை சேர்த்து அடிக்கவும்.

7..பிறகு எண்ணையை ஊற்றி கலக்கி அடிக்கவும்

8.பிறகு மாவு கலவையை விரல் நுனிகளால் தூவி மென்மையாக கலக்கவும்.

9.கடைசியாக வாழைப்பழக்கலவை,கேரட் துருவலை சேர்த்து மென்மையாக கலக்கவும்

10.முதல் 4-7 ஸ்டெப்களுக்கு மட்டும் பீட்டர் தேவை.

11.கலவையை ட்ரையில் கொட்டி அவனில் 20 நிமிடங்கள் வைக்கவும்

12.சுவையான கேரட் பனானா கேக் ரெடி

குறிப்புகள்:

யாருக்காவது ,கேக் செய்ய டிப்ஸ் தேவைபட்டால் என் பழைய குறிப்புகளில் உள்ளது,பார்க்கவும்