கேக் வித் ஐசிங்
தேவையான பொருட்கள்:
முட்டை - 2 சீனி - 100 கிராம் பட்டர் - 100 கிராம் மைதா - 100 கிராம் ஐஸிங் செய்ய: முட்டை வெள்ளை கரு - ஒன்று ரோஸ் வாட்டர் - ஒரு தேக்கரண்டி சீனி பௌடர் - 2 கப் ரோஸ் & பச்சை கலர் - ஒரு சிட்டிகை அலங்கரிக்க: smarties மிட்டாய் - தேவையான அளவு ரோஜா செய்யும் மாவு - 2 கலர்கள் (pate d'amande)
செய்முறை:
முதலில் மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முட்டையை நன்றாக நுரை வர அடிக்கவும். அதனுடன் சீனி சேர்த்து கரைத்து பின் பட்டரையும் போட்டு கலக்கவும்.
பிறகு மைதாவை சேர்த்து கலக்கி கேக் ட்ரேயில் ஊற்றி அவனில் பேக் செய்யவும்.
ரோஜா செய்யும் மாவில் இதழ்கள் தயார் செய்து கொள்ளவும்.
அந்த இதழ்களை கொண்டு 2 கலரில் ரோஜாக்கள் செய்யவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டை வெள்ளை கருவை ஊற்றி லேசாக அடித்துக் கொள்ளவும்.
அதனுடன் சீனி பௌடரை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கலக்கி கிரீம் பதம் வரும் வரை கலக்கி
அதில் ரோஸ் வாட்டர் சேர்க்கவும்.
2 ஸ்பூன் கிரீமில் பச்சை கலர் சேர்த்து எழுதுவதற்காக ஒரு ப்ளாஸ்டிக் பையில் போட்டு வைக்கவும்.
மீதியுள்ள கிரீமில் லைட் பின்க் கலர் சேர்க்கவும்.
கேக் தயார் ஆனதும் அதில் பின்க் கிரீமை ஊற்றி எல்லா பக்கமும் பரவலாக தடவவும்.
அதன் மேல் விருப்பமான வாசகத்தை எழுதி
ரோஜாக்களையும்
மிட்டாய்களையும் கொண்டு அலங்கரிக்கவும்.
இந்த கேக் குறிப்பினை நமது அறுசுவை உறுப்பினரான திருமதி. ரஸியா நிஸ்ரினா அவர்கள் செய்து காட்டியுள்ளார்.