கிறிஸ்மஸ் பிஸ்கட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதாமாவு - இரண்டு கோப்பை

சர்க்கரை - ஒரு கோப்பை

வெண்ணெய் - ஒரு கோப்பை

முட்டை - இரண்டு

பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி

உப்புத்தூள் - ஒரு சிட்டிகை

சார பருப்பு/ pistachio - ஒரு கோப்பை

செர்ரி பழம் - அரைக்கோப்பை

கிரான்பெர்ரி - அரைக்கோப்பை

துருவிய எலுமிச்சை தோல் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

முதலில் அவனை 350 டிகிரி Fல் வைத்து சூடுபடுத்த வேண்டும்.

வெண்ணெயுடன் சர்க்கரையை சேர்த்து கலக்கும் இயந்திரத்தில் போட்டு நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.

மைதாமாவுடன் பேக்கிங்பவுடர், உப்புத்தூளைப் போட்டு இரண்டு முறை ஜல்லடையால் அரித்து வைக்கவும்.

பழங்களையும், பருப்பையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

பிறகு கலக்கிய வெண்ணெய் கலவையில் முட்டைகளை உடைத்து ஊற்றி, துருவிய எலுமிச்சை தோலையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

அதில் மாவைக் கொட்டி தொடர்ந்து நறுக்கிய பழம் மற்றும் சார பருப்பைப் போட்டு நன்கு கலக்கவும்.

இந்த கலவையை ரொட்டி மனையில் வைத்து கைகளால் பிசைந்து உருளையாக நீளமாக உருட்டவும்.

பிறகு இந்த ரோலை அப்படியே பேக்கிங் செய்யும் தட்டில் வைத்து பத்து முதல் பதினைந்து நிமிடம் அவனில் வைத்திருந்து வெளியில் எடுத்து சிறிது ஆறவிடவும்.

முழுவதும் வெந்திருக்க வேண்டும். ஆனால் நிறம் மாறக்கூடாது. வெண்மையாக இருக்க வேண்டும்.

பிறகு இந்த ரோலை கத்தியால் மெல்லிய வட்டங்களாக வெட்டி தட்டில் பரப்பி வைத்து மீண்டும் அவனில் பத்து நிமிடம் வைத்திருந்து வெளியில் எடுத்து நன்கு ஆறியவுடன் எடுத்து வைக்கவும்.

குறிப்புகள்: