காஃபி புட்டிங் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஸ்வீட்டண்டு கண்டன்ஸ்டு மில்க் - ஒரு டின் முட்டை - 6 இன்ஸ்டண்ட் காஃபி தூள் - ஒரு தேக்கரண்டி சர்க்கரை - 2 மேசைக்கரண்டி வெனிலா எஸன்ஸ் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

முதலில் முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றவும். (ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்தால் சிறிது நேரம் வெளியே வைத்திருந்து ஊற்றவும்).

முட்டையுடன் கண்டன்ஸ்டு மில்க்கை சேர்க்கவும்.

பின் வெனிலா எஸன்ஸ் சேர்க்கவும்.

ஒரு பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டி நீரை கொதிக்க விட்டு காஃபி தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனுடன் மேலும் நீர் சேர்த்து கண்டன்ஸ்டு மில்க் டின்னில் அரை டின் அளவு எடுத்துக் கொள்ளவும்.

காஃபி தூள் கலந்த நீரை முட்டை கலவையுடன் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

பாத்திரத்தில் சர்க்கரை போட்டு கைவிடாமல் கிளறவும்.

நல்ல ப்ரவுன் நிறமாக வந்ததும் அதை குக்கர் பாத்திரத்தில் ஊற்றவும். பாத்திரம் முழுவதும் பரப்பி விடவும்.

கலந்த முட்டை கலவையையும் அதில் ஊற்றவும்.

கலவை உள்ள பாத்திரத்தை குக்கரில் வைத்து மூடி விசிலை எடுத்து விட்டு ஒரு டம்ளரை கவிழ்த்து வைக்கவும்.

15 - 20 நிமிடம் வேக விடவும். கத்தியை உள்ளே விட்டு எடுத்தால் சுத்தமாக வரும் போது எடுத்து விடவும்.

நன்றாக ஆறியதும் ஓரங்களை கத்தியால் எடுத்து விட்டு கவிழ்க்கவும். சுவையான காஃபி புட்டிங் தயார். விரும்பினால் சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பிறகு பரிமாறலாம்.

குறிப்புகள்: