கஸ்டர்ட் குக்கீஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உப்பில்லாத வெண்ணெய் - 250 கிராம்

மைதா - 250 கிராம்

கஸ்டர்ட் பவுடர் - 150 கிராம்

சர்க்கரைத் தூள் - 150 கிராம்

முட்டை - ஒன்று

செய்முறை:

முட்டையை அடித்து தனியாக வைக்கவும். பாத்திரத்தில் வெண்ணெயையும்

சர்க்கரைத் தூளையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் க்ரீம் போல் கலக்கவும். அதனுடன் அடித்து வைத்துள்ள முட்டையைச் சேர்த்து கலக்கவும்.

முட்டையைச் சேர்த்து நன்றாகக் கலந்த பிறகு மைதாவையும்

கஸ்டர்ட் பவுடரையும் சேர்த்து கலக்கவும். (கலந்ததும் சப்பாத்தி மாவு போல இருக்கும்).

பிறகு மாவை சிறு உருண்டையாக உருட்டி சர்க்கரைத் தூளில் பிரட்டியெடுத்து ட்ரேயில் அடுக்கவும்.

உருண்டைகளின் மீது ஃபோர்க் கொண்டு அழுத்தவும். இவ்வாறு அழுத்துவதால் வட்ட வடிவ பிஸ்கட் போல் இருக்கும். பிறகு மைக்ரோவேவில் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்

(நான் 350 ​டிகிரியில் வைத்தேன்). வெந்ததும் சிறிது நேரம் ஆறவிட்டு எடுத்து வைக்கவும்.

குறிப்புகள்: