கனேடியன் பேன் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - இரண்டு கோப்பை

சர்க்கரை - கால்கோப்பை

முட்டை - மூன்று

பால் (அ) மோர் - மூன்று கோப்பை

பேக்கிங் பவுடர் - இரண்டு தேக்கரண்டி

பேக்கிங் சோடா - ஒரு தேக்கரண்டி

உப்புத்தூள் - ஒரு சிட்டிகை

ஆலிவ் ஆயில் - ஒரு மேசைக்கரண்டி

வெண்ணெய் - கால் கோப்பை

மேப்பில் சிரப் - ஒரு கோப்பை

செய்முறை:

முட்டைகளின் வெள்ளைக்கருவை தனியாக பிரித்தெடுத்து நுரைக்க அடித்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் மாவைப்போட்டு அதனுடன் சர்க்கரை, உப்பு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா ஆகியவற்றைச் சேர்த்து கலக்கவும்.

பிறகு முட்டையின் மஞ்சள்கருக்களை போட்டு பால் அல்லது மோரை ஊற்றி கலக்கவும். கடைசியில் அடித்து வைத்துள்ள வெள்ளைகருவைப் போட்டு மெதுவாக கலக்கி வைக்கவும்.

பிறகு அடுப்பில் நாண்ஸ்டிக் தோசைக்கல்லை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெயை தடவி விட்டு சூடுப்படுத்தவும்.

பிறகு மாவுக்கலவையிலிருந்து ஒரு குழிக்கரண்டி அளவில் எடுத்து கல்லில் ஊற்றவும். நிரவு விடக் கூடாது.

பிறகு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி போட்டு சிவக்க சுட்டு எடுக்கவும்.

இவ்வாறு எல்லா மாவையும் சுட்டெடுத்த சூடான பேன் கேக்குகளின் மீது வெண்ணெயில் தேவையானதை வைத்து அதற்கு மேல் மேப்பில் சிரப்பை மேலாக உற்றி சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்:

மேப்பில் சிரப் என்பது கனடாவில் மேப்பில் என்ற மரத்திலிருந்து தயாரிக்கப்படும் தேனைப் போன்ற இனிப்பான, அதே நிறத்துடன் கூடிய ஒரு வகை குழம்பு. அதாவது ரப்பர் மரத்திலிருந்து எவ்வாறு அதன் பாலை சேகரிக்கின்றார்களோ அதைப் போலவே, அதே முறையில் இந்த பிசினை சேகரித்து இந்த இனிப்பான சிரப்பை தயாரிக்கின்றார்கள். இந்த சிரப்பைக் கொண்டு கனேடியர்கள் பல்வேறு உணவுகளை சமைத்து மகிழ்கின்றார்கள். சுவை மிகவும் அபாரமாக இருக்கும்.