ஐஸிங் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கேக் மாஜரீன் - ஒன்று ஐஸிங் சுகர் - ஒரு கிலோ மார்சிப்பன் (marzipan) ஐஸிங் செய்யும் அச்சு நிறங்கள் (சமையலுக்குப் பயன்படுத்துவது)

செய்முறை:

ஐஸிங் சுகரை சலித்து வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து வைக்கவும்.

மார்சிப்பன்னை அழுத்தி விரும்பிய உருவத்தை அதில் வரைந்துக் கொண்டு வெட்டவும்.

அதில் விரும்பிய நிறத்தை முழுவதுமாக பூசி விடவும்.

கேக்கின் மேல் பகுதியிலும் அதன் சுற்றிலும் மாஜரீனை பூசவும்.

ஒரு பாத்திரத்தில் ஐஸிங்சுகர்

தேவையான அளவு மாஜரீன்

விரும்பிய நிறத்தை சேர்த்து அடிக்கவும். கலவை இறுக்கமாக இல்லாமல் ஓரளவிற்கு தளர்வாக இருக்க வேண்டும்.

அடித்து வைத்திருக்கும் கலவையை கேக்கின் மேல் பூசவும்.

பின்னர் சூடான தண்ணீரில் கத்தியை தோய்த்துக் கொண்டு கேக்கை சமப்படுத்தி விடவும்.

மீண்டும் தேவையான அளவு ஐஸிங்சுகர்

தேவையான அளவு மாஜரீன்

விரும்பிய நிறத்தை சேர்த்து அடிக்கவும். இது பிழியக்கூடிய பதமாக இருக்க வேண்டும். ஐஸிங் செய்யும் குழாயில் கலவையைத் திணித்து படத்தில் உள்ளது போல் பக்கங்களுக்கு ஐஸிங் போடவும்.

மார்சிப்பன்னில் வெட்டி வைத்திருக்கும் உருவத்தை எடுத்து கேக்கின் மீது வைக்கவும். பின்பு அதில் ஐஸிங் போடவும். (மார்சிப்பன் கிடைக்காவிட்டால் பேப்பரில் விரும்பிய உருவத்தை வரைந்து வெட்டலாம் அல்லது கேக்கின் மீது ஒரு குச்சியால் உருவத்தை வரைந்து ஐஸிங் போடலாம்.)

மீண்டும் வேறு நிறத்தை சேர்த்து கலந்துக் கொண்டு கேக்கின் விளிம்பிற்கு ஐஸிங் போடவும்.

விரும்பிய பெயர்கள்

வாழ்த்துக்களை எழுதிக் கொள்ளலாம். பூக்கள் அல்லது இனிப்புக்கள் இருந்தால் உங்கள் ரசனைக்கு ஏற்ப தேவையான இடங்களில் வைத்து அலங்கரித்துக் கொள்ளவும்.

இதைப் போல் வெவ்வேறு வடிவங்களிலும் ஐஸிங் கேக் செய்துக் கொள்ளலாம். அறுசுவை நேயர்களுக்காக இந்த ஐஸிங் கேக்கை செய்து காட்டியவர் திருமதி. வத்சலா நற்குணம் அவர்கள். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

குறிப்புகள்: