எக்லெஸ் வீட் குக்கீஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு (அல்லது) மல்டிக்ரெய்ன் மாவு - ஒரு கப்

சர்க்கரை - அரை கப்

உப்பில்லாத வெண்ணெய் - 100 கிராம்

உப்பு - கால் தேக்கரண்டியைவிட சற்று குறைவான அளவு

ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி

பால் - தேவைக்கேற்ப

செய்முறை:

பேக்கிங் ட்ரேயில் வெண்ணெய் தடவி வைக்கவும். சர்க்கரையை பொடி செய்து கொள்ளவும்.

மாவுடன் பொடி செய்த சர்க்கரை

உப்பு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும்.

வெண்ணெயுடம் ஒரு மேசைக்கரண்டி பால் விட்டு கலந்து கொள்ளவும்.

அத்துடன் மாவைச் சேர்த்து பிசையவும்.

மாவு சப்பாத்தி மாவு பதத்தில் இருக்க வேண்டும். அதற்கேற்றபடி பால் சேர்த்து பிசையவும். (நான் மல்டிக்ரெய்ன் ஆட்டா பயன்படுத்தினேன். அதற்கு ஒன்றரை மேசைக்கரண்டி அளவு பால் சேர்த்து பிசைந்தேன்). அவனை 180 C ’ல் முற்சூடு செய்யவும்.

பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி

உள்ளங்கையில் வைத்து லேசாக அழுத்தி

பேக்கிங் ட்ரேயில் அடுக்கவும். ஒன்றுக்கொன்று ஒரு இன்ச் இடைவெளி இருக்குமாறு அடுக்கி

ட்ரேயை அவனில் வைத்து 15 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

குறிப்புகள்: