எக்லெஸ் மேங்கோ கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - ஒரு கப் வெண்ணெய் - 1/3 கப் பேக்கிங் பவுடர் - முக்கால் தேக்கரண்டி பேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி மாம்பழக் கூழ் - அரை கப் சர்க்கரை - அரை கப் ஸ்வீடண்ட் கன்டண்ஸ்டு மில்க் - 200 கிராம் பால் - 4 மேசைக்கரண்டி ஏலக்காய்த் தூள் / வெனிலா எசன்ஸ் - சிறிது

செய்முறை:

மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா கலந்து சலித்து வைத்துக் கொள்ளவும். பேக்கிங் ட்ரேயைத் தயார் செய்து வைக்கவும். அவனை 180 C’ல் முற்சூடு செய்யவும்.

மிக்ஸியில் மாம்பழக் கூழுடன் சர்க்கரையைச் சேர்த்து அடித்து வைக்கவும்.

வெண்ணெயுடன் கன்டண்ஸ்டு மில்க் மற்றும் மாம்பழச் சர்க்கரைக் கூழ் கலவையைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.

அதனுடன் வெனிலா எசன்ஸ் / ஏலக்காய்த் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

பிறகு சலித்து வைத்துள்ள மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கலந்து கொள்ளவும்.

கடைசியாக பால் சேர்த்து கலக்கவும். மாவின் பதம் கெட்டியாகவோ

நீர்க்கவோ இருக்கக்கூடாது. அதற்கேற்றது போல் பாலின் அளவைச் கூடுதலாகவோ

குறைவாகவோ சேர்க்கலாம்.

பேக்கிங் ட்ரேயில் மாவுக் கலவையை ஊற்றி முற்சூடு செய்த அவனில் 20 - 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து

கேக்கின் உள்ளே விட்ட டூத் பிக்கில் ஒட்டாமல் வரும் போது எடுக்கவும்.

சாஃப்ட் & டேஸ்டி எக்லெஸ் மேங்கோ கேக் ரெடி. ஆறியதும் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

குறிப்புகள்: