எக்லெஸ் ப்ளைன் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

1. மைதா - 1 1/4 கப்

2. பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி

3. பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி

4. ஸ்வீட்டண்ட் கண்டென்ஸ்ட் மில்க் - 1/2 கேன் (7 அவுன்ஸ்)

5. பால் - 1/2 கப்

6. வென்னிலா எசன்ஸ் - 1 1/2 தேக்கரண்டி

7. வெஜிடபிள் ஆயில் - 1/2 கப்

8. வால் நட்ஸ் (அ) டூட்டி ஃப்ரூட்டி - சிறிதளவு

செய்முறை:

ஒரு பெரிய பாத்திரத்தில் மைதா,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா சேர்த்து 2 அ 3 முறை சலித்துக் கொள்ளவும்.

அதன் நடுவே பள்ளம் செய்து,கண்டென்ஸ்ட் மில்க்,பால்,வென்னிலா எசன்ஸ் மற்றும் வெஜிடபிள் ஆயில் சேர்க்கவும்.

பிறகு இரண்டையும் கட்டியில்லாமல் கலக்கவும்.அதிகம் பீட் பண்ண வேண்டாம்.இந்த கலவை மிகவும் திக்காக தான் இருக்கும்.

இதனுடன் வால் நட்ஸை சிறு சிறு துண்டுகளாக உடைத்து சேர்த்துக் கொள்ளவும்.

வெண்ணெய் தடவி,மைதா மாவு பூசி தயாராக வைத்துள்ள பாத்திரம் அல்லது பேக்கிங் ட்ரேயில் இந்த கலவையை ஊற்றவும்.

350 டிகிரி ல் அவனை முற்சூடு செய்து,அதில் 25 முதல் 30 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.கேக்கை மையப்பகுதியில் டூத் பிக் கொண்டு வெந்து விட்டதா என பார்த்துக் கொள்ளவும்.அதிகம் வெந்து விட்டால்,மேலே கடினமாகி விடும்.

சுவையான எக்லெஸ் ப்ளைன் கேக் தயார்.

குறிப்புகள்:

பொதுவாக எக்லெஸ் கேக் உப்பாது.ஆனால் இந்த கேக் நன்கு உப்பி,மேலெழும்பும்.சாஃப்டாகவும் இருக்கும்.