எக்லஸ் மேங்கோ மஃபின்ஸ்
தேவையான பொருட்கள்:
1. மாம்பழ கூழ் - 1/2 கப்
2. மைதா - 3/4 கப்
3. வெண்ணெய் / எண்ணெய் - 1/4 கப்
4. பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
5. பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி
6. உப்பு - ஒரு சிட்டிகை
7. சர்க்கரை - தேவைக்கு
செய்முறை:
மாம்பழ கூழுடன் சர்க்கரை, உருகிய வெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
மாவுடன் உப்பு மற்றும் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா கலந்து கொள்ளவும்.
இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.
மஃபின் ட்ரேவில் லைனர் வைத்து 3/4 பாகம் நிரப்பவும்.
180 C’ல் முற்சூடு செய்த அவனில் 15 - 20 நிமிடம் வரை பேக் செய்யவும்.
டூத்பிக்கால் குத்தி பார்த்தால் ஒட்டாமல் வர வேண்டும். அப்போது எடுத்து விடலாம். சுவையான மேங்கோ மஃபின் தயார்.
குறிப்புகள்:
மாம்பழ கூழ் சேர்த்த பின் மாவை அதிகமாக அடித்து கலக்க கூடாது. சாதாரணமாக எல்லாம் ஒன்றாக கலக்கும் அளவுக்கு கலந்தால் போதுமானது. அதிகம் கலந்தால் மஃபின் அழுந்திவிடும். மிகுந்த சுவையான மஃபின்ஸ். ரொம்ப ஸாஃப்ட்... அதே சமயம் ஈரப்பதமும் அளவா இருக்கும். ட்ரையா இருக்காது. மாம்பழ வாசம் அருமையாக இருக்கும். விரும்பினால் இதில் பட்டை பொடி அல்லது ஏலக்காய் பொடி 1/4 தேக்கரண்டி சேர்க்கலாம் அல்லது 1/2 தேக்கரண்டி வெண்ணிலா எஸன்ஸும் சேர்க்கலாம். முட்டை சேர்க்க விரும்பினால் வெண்ணெய் அளவை பாதியாக குறைத்து 1 முட்டை சேர்க்கலாம். சர்க்கரை அளவு மாம்பழத்தின் இனிப்புக்கு ஏற்ப சேர்க்கவும். பொதுவாக மஃபின்ஸ் அதிக இனிப்பு இல்லாமல் இருந்தால் சுவையாக இருக்கும்.